நல்லிணக்க முனைப்பின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வாராந்த செய்தியாளர் சந்திப்பில் இன்று உரையாற்றிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மஹிசினி கொலன்னே, இந்த விழாவின் மூலம் புலம்பெயர்ந்தோரின் நல்லெண்ணத்தை இலங்கையின் அபிவிருத்திக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டார் புலம்பெயர்ந்த இலங்கையர்களில் புத்திஜீவிகள் மற்றும் நிபுணர்கள் நாட்டுக்கு வர விரும்புகின்றனர் அவர்கள் நாட்டின் அபிவிருத்திக்கு துணையாக இருப்பர். இதன் ஒரு கட்டமாக கடந்த வாரம் புலம்பெயர்ந்தோர் அமைப்புக்களுடன் சந்திப்பு இடம்பெற்றது இதில், அமைச்சர் மங்கள சமரவீர பங்கேற்றார் என்றும் கொலன்னே குறிப்பிட்டார்.
இதேவேளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை புலம்பெயர்ந்தோருடன் இணைந்து நடைமுறைப்படுத்தி இறுதி சமாதானத்தை அடைய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்கிறது என்றும் கொலன்னே குறிப்பிட்டுள்ளார்.
புலம் பெயர் அமைப்புக்களை தன்னார்வ உதவி நிறுவனங்களாக(NGO) உருமாற்றி இலங்கை அரசுடன் இணைத்துக்கொள்வதற்கான விழாவே இங்கு குறிப்பிடப்படுகிறது. இதற்கு மறுப்புத் தெரிவிப்பவர்கள் மீது போர்க்குற்றம் உட்பட பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என்பதை எரிக் சுல்கையிம் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் நாடுகளிலுள்ள ஏனைய அமைப்புக்கள் இந்த விழாவில் கலந்துகொள்ள மாட்டோம் என வெளிப்படையாகத் தெரிவிப்பார்களா என்பது சந்தேகமே.! தன்னார்வ நிறுவனங்களுக்கு மில்லியன்களை வழங்கும் அரச அமைப்புக்கள் புலம்பெயர் அமைப்புக்களை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. பொதுவாக மாவீரர் தினம் போன்ற நினைவு நிகழ்வுகளில் புலம்பெயர் அமைப்புக்கள் சம்பாதிக்கும் பணத்தை விட அதிகமாக வழங்கப்படுமானால், இலங்கை விழாவில் வைன் கோப்பையும் கையுமாகப் புலம்பெயர் அமைப்புக்களைக் எதிர்பார்க்கலாம்.