Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை அரசை ஆதரிப்போம் எனக் கூறும் அமெரிக்காவும் அதன் புலம்பெயர் ஒட்டுக்குழுக்களும்

United-States-Sri-Lankaஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அறிக்கை குறித்து இலங்கையுடன் இணைந்து செயற்படத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் சர்வதேச நிறுவன விவகாரங்களுக்கான பிரிவின் துணைப் பிரதி செயலாளர் எரின் எம். பார்க்லேய் இதனைத் தெரிவித்துள்ளார். பொறுப்புக்கூறுதல் முறைமை ஒன்றை இலங்கை அரசாங்கம் ஏற்படுத்த பூரண ஆதரவளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளை சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவங்களின் தயவில் இயங்கும் புலம்பெயர் தனி நபர்களும் ஊடகங்களும் அமெரிக்காவே இலங்கை அரசைத் தண்டிகும் என்றும் அமெரிக்காவிடமிருந்தே நீதி கிடைக்கும் என்றும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

ஏகாதிபத்திய ஒட்டுக்குழுக்கள் இப்போது அமெரிக்காவை மன்றாடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

சில வாரங்களின் முன்னர் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நடத்திய கூட்டம் ஒன்றில் அமெரிக்க அரசு தமிழ்ப் பேசும் மக்களின் நண்பர்கள் என்றும் அமெரிக்காவில் வெளிவிகாரக் கொள்கைகள் அமீபா போன்று கணத்திற்குக் கணம் மாறும் என்றும் கூறிவைத்துள்ளனர்.

Exit mobile version