Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

G8 ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக பிரித்தானியப் கலகமடக்கும் படையின் போர் நடவடிக்கை

police_rவரும் வாரத்தில் நடக்கவிருக்கும் ஜீ 8 நாடுகள் என்று அழைக்கப்படும் உலகின் பணக்கார நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக லண்டனில் இன்று செவ்வாய்க்கிளமை கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. முதலாளித்துவ எதிர்ப்பியக்கம் என்று அழைக்கப்பட்ட  ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் நடைபெறுகின்றன. பிரங்போர்டில் அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் சட்டவிரோதமான முறையில் அரசபடைகளால் ஒடுக்கப்பட்டது தெரிந்ததே.
லண்டனில் இன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வ ஆரம்பிக்கும் முன்பதாகவே  போலிஸ் ஆர்ப்பாட்ட நிகழ்வு நடைபெறும் இடத்திற்குச் சென்று அங்கிருந்தவர்களை விலங்குகளைப் போன்று வெளியேற்றியது. 32 பேர்வரையில் கைது செய்து கூட்டம்   நடைபெறும் முன்பதாகவே குழப்பியுள்ளது.
கூட்டம் நடைபெற்ற இடத்தில் கட்டடங்களின் மேலேயும் போலிஸ் படைகள் பதுங்கியிருக்க போர் நடைபெறுவது போன்ற சூழல் ஒன்று காணப்பட்டது.
வானத்தில் போலிஸ் ஹெலிகொப்டர்கள் வட்டமிட நூற்றுக்கும் மேற்பட்ட கலகம் அடக்கும் படையினர்  நடைபெறுவதற்கு சில மணி நேரங்கள் முன்பதாகவே அங்கு சென்று கைதுகளை நிகழ்த்தியுள்ளனர்.
‘stop g8’ என்று பெயரிடப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெறும் என ஒழுங்கமைப்பாளர்கள் ரிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version