Frontlins சஞ்சிகை இலங்கை சுங்கப் பிரிவினால் 14.02.2014 அன்று தடுத்துவைக்கபட்டது. இனியொரு தவிர்ந்த ஏனைய ஊடகங்கள் இத் தகவலை இருட்டடிப்புச் செய்தன. விடுதலைப் புலிகளின் மறைந்த தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அனிதா பிரதாப் உடனான நேர்காணல் மறு பிரசுரம் செய்யப்பட்டிருந்தமையே தடுத்துவைக்கபட்ட்மைக்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது. இன்று சஞ்சிகையை நாட்டுக்குள் கொண்டுசெல்வதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஊடகங்களில் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருந்த போதும் இலங்கை அரசின் போலி ஜனநாயக முகம் வெளிப்படுத்தப்பட்டதும் சஞ்சிகையை அனுமதித்துள்ளது. பாராளுமன்றத் தேர்தல் காலம் வரைக்கும் இலங்கை அரசு அரை-ஊடக சுதந்திரத்தை வழங்கும்.எனினும் இது நிரந்தரமற்றது.
இனியொருவில் தடை தொடர்பாக வெளியாகியிருந்த தகவல்: