Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

EPDP இன் பிரச்சராக் கூட்டத்தில் முன்னை நாள் புலி கருணாகரன்

karunakaranமாற்றம் என்பது உலகின் ஒவ்வொரு பொருளிலும் தவிர்க்கவியலாத நிகழ்வு. உலகின் இயக்கத்தில் மாற்றம் என்பது சமூகத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்லும். சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை தமிழ்த் தேசியம் என்ற இனவாதப் போராட்டமாக மாற்றிய யாழ்ப்பாண உயர் குடிகள் அழிவுகளை மட்டுமே ஏற்படுத்தினர். இவர்கள் மாற்றத்தை நிராகரிப்பவர்கள்.

எப்போதும் அதிகாரவர்க்கத்தோடு ஒட்டிக்கொள்ளும் இந்த உயர்குடிகள், தமது சமூகத்தின் உட்புறத்திலேயே ஒடுக்கும் முகவர்களாகச் செயற்படுகின்றனர். சாதீய ஒடுக்குமுறை, இனவாதம், பிரதேச ஒடுக்குமுறை போன்றவற்றின் தூதுவர்களாகவே இவர்கள் செயற்படுகின்றனர்.

முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டாய இராணுவச் சேர்ப்பில் ஈடுபட்ட வேளையில் அச் செயற்பாட்டை ஊக்கப்படுத்தியவர்களுள் கருணாகரனும் ஒருவர். புலிகளில் ஊடகப்பிரச்சாரப் பிரிவின் பொறுப்பதிகாரி.

இலங்கை அரச படைகளின் துணைக்குழுவாகச் செயற்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மேடைகளில் கருணாகரன் இன்று தேர்தல் பிரச்சரம் மேற்கொள்கிறார்.

சரியாக ஆறுவருடங்களின் முன்னர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியின் அடிமட்ட உறுப்பினர் ஒருவர் கருணாகரனின் பிடியில் அகப்பட்டிருந்தால் இன்று அவரது புதைகுழியின் மேல் முளைவிட்டிருக்கும் பூஞ்செடியின் வயது ஆறுக்கு மேலாக இருந்திருக்கும்.
மாற்றத்தை உருவாக்கும் வல்லமையும் சாணக்கியமும் கொண்ட ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் வேட்பாளர் சந்திரகுமாருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கருணாகரன் டக்ளசின் கிளிநொச்சிப் பிரச்சார மேடையில் முழங்கினார்.

ஆறு வருடங்கள் கருணாகரனை மாற்றவிலை மீண்டும் அதிகாரவர்க்கத்தோடு ஒட்டிக்கொண்ட கருணாகரன் தனது கடந்தகாலத் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான புதிய அதிகாரத்தோடு மேடைகளில் முழக்கமிடுகிறார்.

தமிழ் தேசியவாதிகளின் தேசியம் எதிரிக்கு சவாலாக இருந்திருக்குமானால் இப்போது எதிரியின் சிறைக்கூண்டிலில் இருந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் எதிரிக்கு அச்சமூட்டும் தேசியத்தை அவர்கள் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார்.

கருணாகரனைக் கொண்டாடுவதற்கு புலம்பெயர் அரச துணைக்குழுகளும் தவறவில்லை. தமிழ்த் தேசியத்தின் பெயரால் இலங்கை அரசோடு ஒட்டிக்கொள்ளும் குழுக்கள் ஒருபுறமும், தலித்தியம், ஜனநாயகம்,இலக்கியம் ஆகியவற்றின் பெயரால் ஒட்டிக்கொள்ளும் குழுக்கள் மறுபுறமுமாக மக்களின் அவலத்தை மூலதனமாக்கிக் கொள்கின்றன.

Exit mobile version