Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

டெல்லியில் விவசாயிகளின் முற்றுகைப் போராட்டம்: அரச பயங்கரவாதி அமித் ஷா சரணடைந்தார்

டெல்லியை முற்றுகையிட்டு பஞ்சாப் விவசாயிகள் மூன்றாவது நாளாகப் போராட்டம் நடத்துகின்றனர். பன் நாட்டு வியாபார நிறுவனங்களுக்காக நடத்தப்படும் ஆர்.எஸ்.எஸ் – பாரதீய ஜனதாக் கட்சியின் மதவெறி ஆட்சி நிறைவேற்றிய விவசாய மசோதவிற்கு எதிராக விவசாயிகளின் போராட்டத்தால் டில்லி செயலிழந்து போனது. கடந்த நான்கு நாட்களாக நடைபெறும் இப் போராட்டத்திற்கு இந்திய மத்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா சரணடைந்தார். இந்தியாவில் தன்னை ஒரு வெறுக்கத்தக்க சர்வாதிகாரியாகவே முன் நிறுத்திவந்த அமித் ஷா வின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி விவசாயிகளுக்கும் அரசின் விவசாய அமைச்சருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை ஒழுங்கு செய்யப்படும் என்றும் அதுவரை போராட்டத்தை நிறுத்துமாறும் அமித் ஷா வேண்டுகொள் விடுத்துள்ளார்.

டில்லியில் இது குளிர்காலம், சாரிசாரியாக போராட்டத்தில் கலந்துகொள்ளும் விவசாயிகள் தொலைவிலிருந்து உழவு இயந்திரங்கள் மற்றும் வாகனங்களில் கூட பயணம் செய்து டெல்லியை வந்தடைந்துள்ளனர். வீதிகளிலிருந்து விலகி போராட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்குப் பின்வாங்குமாறு அமித் ஷா மேலும் தெரிவித்துள்ளார். அமித் ஷாவின் இக் கோரிக்கையை விவசாயிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

விவசாய உற்பத்திப் பொருட்களையும்,விலை நிர்ணயத்தையும், களஞ்சியங்களையும் பெரும் வியாபார நிறுவனங்களின் காலடியில் கொண்டுவர இந்திய அரசால் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்ததிற்கு எதிரான போராட்டத்தை ஆரம்பத்த்லிருந்தே பஞ்சாப் விவசாயிகள் தமது எல்லைக்குள் முன்னெடுத்துவந்தனர். அவை அனைத்தையும் இந்திய அரசு கண்டுகொள்ளாத காரணத்தால் டெல்லி வரை இப் போராட்டம் நகர்ந்து சென்றது.

மக்கள் எதிர்ப்பு உருவகின்ற ஒவ்வொரு காலப்பகுதியிலும், இந்துத்துவ மத வெறியை முன்வைத்து அவற்றை மடைமாற்றும் இந்திய அரசை ஆட்டம்காணவைத்துள்ள இந்தப் போராட்டம் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அரசின் பயங்கரவாதத்திற்கு எதிரான முன்னுதாரணம்.

மேலதிக வாசிப்பிற்கு:

டெல்லி முடக்கிப் போட்ட விவசாயிகள் போராட்டம் தடியடி கண்ணீர்புகை வீச்சு!

Exit mobile version