ஜேர்மனியப் பல்பொருள் அங்காடிகளான லிடில் மற்றும் அல்டி போன்றவற்றுடன் போட்டிபோட முடியாமையே பிரதான காரணமாகக் கூறும் ரெஸ்கோவின் பங்குதாரர்கள் பலர் நிறுவனத்திலிருந்து தமது முதலீட்டை மீளப் பெற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். கடந்த இரண்டு தசாப்தங்களாக சில்லைரை வர்த்தகத்தை தனது ஆதிக்கத்தில் வைத்திருந்த ரெஸ்கோ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி முதலாளித்துவப் பொருளாதார அமைப்பின் தவிர்க்க முடியாத நெருக்கடிகள் ஒன்று.
இந்த மாதத்தின் ஆரம்பத்தில் தனது 43 கிளைகளை மூடிய ரெஸ்கோ 2500 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது. மேலும் தனது வெளி நாட்டுக் கிளைகளில் 4000 பணியாளர்களை நிக்கியுள்ளது. இதனூடாக 416 மில்லியன் ஸ்ரேளிங் பவுண்ஸ் பணத்தைச் சேமித்துள்ளதாக நிறுவனம் கூறுகிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்னதாக அல்டி லிடில் போன்ற நிறுவனங்கள் பிரித்தானியாவின் வறுமை நிலையிலுள்ளவர்களுக்கான விற்பனை நிலையங்களாக காணப்பட்டன.
இன்று இவை அனைத்து மக்களையும் கவர்கின்றன என்றால் மக்களின் வாழ்க்கைத்தரம் பாதாளத்தை நோக்கி சர்வடைந்துகொண்டிருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது. ஐரோப்பிய நாடுகள் என்ற பொருளாதாரச் சிறையில் அடைக்கபட்டிருக்கும் மக்கள் கூட்டம் சமூக மாற்றத்தை எதிர்பார்க்கின்றது. முதலாளித்துவப் பொருளாதாரம் மக்களின் தேவைகளைத் திருப்தி செய்யாது என்ற முடிவிற்கு கணிசமான மக்கள் தொகையினர் வந்தாகிவிட்டது..