பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா கொழும்பில் நடத்திய ஊடகவிலயாளர் சந்திப்பில் புலம்பெயர் நாடுகளிலிருந்து புலி வருகிறது என பூச்சாண்டி காட்டினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் வலுவாக காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைந்து நாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். யுத்த களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், மீள ஒருங்கிணைவதற்கான மிகப் பாரிய காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்ப் பேசும் மக்கள் போராடுவது பிரிந்து செல்லும் உரிமைக்காக. சுய நிர்ணைய உரிமை ஐ.நா சபை உட்பட எல்லா நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை ஜனநாயக உரிமையாகும். சுய நிர்ணைய உரிமை வழங்கப்பட்டால் பிரிந்து செல்வதா இணைந்து வாழ்வதா என்பது குறித்து தமிழ்ப் பேசும் மக்கள் தீர்மானிப்பார்கள்.
பிரிந்து செல்லும் உரிமைக்கான கோரிக்கையும் போராட்டமுமே இன்றைய தேவை. புலிகள் இன்னும் வாழ்கிறார்கள் என்றும் அனைத்துலகச் செயலகம், தலைமைச் செயலகம் என்று வெற்று வியாபாரத்திற்காக புலம்பெயர் தமிழ்ப் பிழைப்புவாதிகள் காட்டும் பூச்சாண்டி இலங்கை பேரினவாத அரசிற்கு வசதியானதாக அமைகிறது.
இன்று இலங்கையில் நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றிற்கிடையேயான மோதலில், வியாபாரத்திற்காக மட்டும் புலம்பெயர் நாடுகளில் பிழைப்புவாதிகள் பயன்படுத்தும் புலி அடையாளம்பேரினவாதத்தை வளர்க்கப் பயன்படும்.
சுய நிர்ணைய உரிமைக் கோரிக்கைகான அரசியல் முன்வைக்கப்படாமல், தெருக்களில் புலிக் கொடிகளோடு மக்களை அலையவிடும் பிழைப்புவாதிகள் இறுதித் தமிழன் அழிக்கப்படும் வரை ‘எங்கள் தலைவர் பிரபாகரன்’ எமக்கு வேண்டும் தமிழீழம்; என்பதைத் தவிர வேறு எந்த அரசியலையும் முன்வைக்கப் போவதில்லை.