Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கஜேந்திரகுமாரின் புரியாத புதிருக்கு விடை என்ன?

கஜேந்திரகுமார்
கஜேந்திரகுமார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்திற்குச் சென்று சில உரிமைகளைக் கேட்டுப் பெற்றுக்கொள்வதாகக் கூறுகின்றனர். அவர்களுடைய பேச்சுகளிலேயே ஒற்றையாட்சிப் பாராளுமன்ற எல்லைக்குள் தமக்குத் தேவையானதை கெஞ்சிக் கூத்தாடிப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம் என்று கூறுகின்றனர். பாராளுமன்றதால் எதையும் சாதித்துவிட முடியாது என்பதையே அவர்கள் தமது தேர்தல்கால வார்த்தைகளில் கூறுகின்றனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ‘அகில இலங்கை’ கட்சியைப் பொறுத்தவரை அப்பட்டமான கோமாளித்தனமான முழக்க்ங்களை முன்வைக்கின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமக்கும் இடையேயுள்ள ஒரே வேறுபாடு என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்லிகொள்வது போர்க்குற்றவிசாரணை மட்டுமே. புலம்பெயர் நாடுகளில் புலிகளை முள்ளிவாய்க்கால் வரை அழைத்துச் சென்று முடக்கிக் கொன்று போட துணை சென்ற புலம்பெயர் தலைகளுக்காக அரசியல் நடத்தும் கஜேந்திரகுமார் குழுவிற்கு மக்களின் வாழ்வியல் பிரச்சனைகள் குறித்து எதுவும் தெரிவதில்லை. போர்க்குற்றத்தில் மட்டுமே அவர் சிறப்புத் தகமை பெற்றுள்ளார்.

கூட்டமைப்பு உள்ளக விசாரணை என்ற கருத்தை முன்வைப்பதால் தாங்கள் சர்வதேச விசாரணையை என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.

கஜேந்திரகுமாரின் அலங்காரமான வார்த்தைகளின் பின்னால் ஒளிந்துள்ள போலித்தனம் மக்களை முட்டாள்களாக்கிவிடுகிறது.

சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை செய்யப் போகிறோம் என்று கஜேந்திரகுமார் சொல்வாரானால் அது அமெரிக்கா இந்தியா உட்பட அதன் துணை நாடுகள் ஊடாகவே நடத்தப்பட வேண்டும்.

அமெரிக்கா இந்தியா மற்றும் அதன் துணை நாடுகளோ உள்ளக விசாரணை போதுமானது எனத் தீர்மானித்து அதனை நடைமுறைப்படுத்துகின்றன. வன்னப்படுகொலைகள் நடைபெற்ற காலத்திலிருந்தே அங்கு நடைபெற்றது இனப்படுகொலை என்றே இந்த நாடுகளிடம் எடுத்துச் சொல்லப்பட்டது. பின்னர் அவர்கள் போர்க்குற்ற விசாரணை நடத்த உதவுகிறோம் என்றார்கள். இலங்கையில் புதிய ஆட்சி ஏற்பட்டதும் இனிமேல் உள்ளக விசாரணைதான் என சர்வதேசம் என அழைக்கப்படும் அமெரிக்கா மட்டும் இந்தியா உட்பட்ட நாடுகள் தான் கூறிவருகின்றன.

ஆக, சர்வதேச விசாரணை என்று கஜேந்திரகுமார் அணி கூறுவதன் உள்ளர்த்தம் என்ன? இதை அவர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும். வெற்று கோசம் என்று கூறுவது இதுதானோ? அல்லது சீனா, ரஷ்யா போன்ற நாடுகளை ராஜபக்ச ஊடாக அணுகி போர்க்குற்ற விசாரணைக்கு முயற்சிக்கின்றனரா?

Exit mobile version