வடக்கில் 65000 வீடுகளை அமைக்கும் திட்டத்திற்கு நிபுணர் குழுவினர் அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழுத்தும் வெயிலில் தற்காலிக உலோகப் பொந்துகளை அமைத்து அவற்றை வீடுகள் எனப் பெயரிட முனையும் சுவாமிநாதன் ‘நல்லாட்சி’ அரசின் தமிழ் முகம். 6500 உலோகப் பொந்துகள் உடைந்து சிதறும் போது சுற்றாடல் பேரழிவைச் சந்திக்கும் என்பதைக்கூட ஒருவரும் சிந்திக்கவில்லை. சுன்னாகத்தில் நஞ்சு நீர் அருந்தும் சமூகம் தோன்றியிருப்பது போல உலோகப் பொந்துகளில் நோய்களைச் சுமந்த சமூகம் உருவாகும். இவையெல்லாம் திட்டமிட்டு நடத்தப்படும் அழிவுகளா இல்லையா என்பதற்கு அப்பால் இனப்படுகொலையின் வடுக்களோடு வாழும் சமூகத்தின் மீது நடத்தப்படும் அதிகாரவர்க்க யுத்தம் என்பது மட்டும் உண்மை.
இங்கு நல்லாட்சியின் தமிழ்த் தேசிய முகமான சுமந்திரன் சுவாமிநாதனுக்கு இந்திய நிறுவனம் கொமிசன் வழங்கியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். சுன்னாகம் நிலத்தடி நீர் மாசாகப்பட்டது தொடர்பாக மூச்சுக்கூட விடாமல் தான் யாழ்பாணத்தில் குறுக்கும் மறுக்குமாக நடந்து திரிந்தமைக்கான காரணத்தை சுமந்திரன் மறைமுகமாகக் கூறியுள்ளார். சுன்னாகம் பிரச்சனையில் சுமந்திரன் பெற்றுக்கொண்ட கொமிசனைப்பற்றிக் கேள்வியெழுப்ப வட மாகாணத்தில் ஒருவரும் எஞ்சியிருக்கவில்லை. ஐங்கரநேசன், விக்கி, சுவாமிநாதன், சுமந்திரன் என ஒரு நீண்ட கொமிசன் குழாம் இன்றைய தமிழர்களின் அரசியலின் குறியீடுகள்.