Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடக்கு மாகாண சபை சுன்னாகத்தை அழித்த நிறுவனத்தைக் காப்பாற்றியதற்கான ஆதராம்!

BUP_DFT_DFT-4-16சுன்னாகம் அனல் மின்னிலையத்தை நடத்தி யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியை நஞ்சாக்கிய எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்தின் சுற்றாடல் குற்றவியல் செயற்பாட்டை மறைத்து அழிவைத் துரித்தப்படுத்திய வடக்கு மாகாண சபையின் நிபுணர்குழுவின் அறிக்கை திட்டமிடப்பட்ட நடவடிக்கை. எம்.ரி.டி வோக்கஸ் இன் உப நிறுவனமான நோதேர்ண் பவர்ஸ் அனல் மின் நிலையத்தை நடத்திவந்தது.

இந்த நிற்யுவனத்தைக் காப்பாற்றும் வகையில் வட மகாண சபை அமைத்த நிபுணர்குழுவின் முதலாவது அறிக்கை கடந்த வருடத்தின் மார்ச் மாதம் வெளிவந்தது.
அறிக்கை வெளியானதும் எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்தின் தலைவர் லால் பெரேரா, வட மாகாண சபை தம்மைக் காப்பாற்றிவிட்டதாக அறிக்கை வெளியிட்டார். வட மாகாண சபை அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கையை ஆதாரம் காட்டி, சுன்னாகம் நீர் மாசடைந்தமைக்கு தாம் பொறுப்பல்ல என அறிக்கை விடுத்தார்.

“”The announcement by the Expert Committee appointed by the Northern Provincial Council to study the water contamination issue in Jaffna, that there were no dangerous septic pollutants in the groundwater, is a major relief to the people of the Northern Province,” – MTD Walkers Plc Director/CEO Lal Perera. – See more at: http://www.ft.lk/2015/03/23/mtd-walkers-optimistic-further-investigations-will-vindicate-baseless-accusations/#sthash.REqQD8Pp.dpuf

அதனைத் தொடர்ந்து வடமாகாண சபை தனது இறுதி அறிக்கையை கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் அவசர அவசரமாகச் சமர்ப்பித்தது.

இறுதி அறிக்கையிலும் சுன்னாகம் நீர் மாசடையவில்லை எனத் தெரிவித்திருந்தது.
இலாபவெறிகொண்ட ஒரு நிறுவனத்தின் நலனுக்காக வட மாகாண சபை இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் மக்களின் வாழ்க்கையை விலைபேசியுள்ளது.

தவிர, வடமாகாண சபையின் அமைச்சர்களுக்கும் தென்னிந்தியாவில் அமைந்துள்ள மத நிறுவனம் ஒன்றிற்கும் எம்.ரி.டி வோக்கஸ் பெருந்தொகைப் பணத்தை வழங்கியிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத உள்ளகத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இத் தகவல் தொடர்பான முழு விசாரணையின் பின்னர் இனியொரு செய்தியை வெளியிடும்.

சுன்னாகத்தில் நடப்பது என்ன?

சுன்னாகம் நீரை நஞ்சாக்கிய கிரிமினல் நிறுவனத்தின் மோசடி அம்பலம்

 

Exit mobile version