Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போதைப்பொருள் கடத்தல் மாபியாவைப் பாதுகாக்குமாறு இலங்கை அரசின் உயர்மட்டம் அழுத்தம்

dhumindaஇலங்கையின் போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான வேலே சுதா என்பவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இலங்கையின் போதைப்பொருள் வலையமைப்பின் தலைமையிலிருக்கும் துமிந்த சில்வா கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தார். ராஜபக்ச குடும்பத்தின் நண்பரான துமிந்த சில்வா பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர எனப்வரைப் படுகொலைசெய்ய முயற்சித்த வேளையில் படுகாயமுற்று சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றார்.

ராஜபக்ச அரசில் பராளுமன்ற உறுப்பினராகப் பதவிவகித்த துமிந்த சில்வாவின் போதைப்பொருள் வலையமைப்பில் கோத்தாபய ராஜபக்சவிற்கும் பங்குண்டு என்ற தகவல்கள் முன்னதாக வெளியாகியிருந்தன.

துமிந்த சில்வா மீதன விசாரணையை நிறுத்துமாறு இலங்கை உளவுத்துறைக்கு இன்றைய அரசின் உயர் அதிகாரிகளால் அழுத்தம் வழங்கப்பட்டு வருவதாக ஆங்கில இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது..
இலங்கையின் இன்றைய அரசில் அங்கம் வகிக்கும் பெரும்பாலானவர்கள் ராஜபக்ச அரசில் வெவ்வேறு பதவிகளை வகித்தவர்களே.

லசந்த விக்கிரமசிங்க கொலை உட்பட ராஜபக்ச குடும்பத்தின் மீது பல்வேறு கொலைக் குற்றங்களுக்கான ஆதாரங்கள் இருந்த போதும் அவர்கள் மீதான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படாமலிருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version