Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிடல் கஸ்ரோ தொடர்பான மேற்கு கோப்ரட் ஊடகங்களின் பொய்கள் அம்பலமாகின்றன

பிடல் கஸ்ரோவின் மரணத்தைத் தொடர்ந்து மேற்கின் ஊடகங்கள், குறிப்பாக சீ.என்.என், பீ.பீ.சீ போன்றன, உலகின் பயங்கரமான சர்வாதிகாரி மரணித்துவிட்டதாகவும் கியூபாவில் ஜனநாயகம் மலரப்போவதாகவும் தீவிர பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவ ஜனநாயக முறைமையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் அங்கு மக்கள் மத்தியில் ஆழமான தேர்தல் நடத்தப்படுவதையும் மறைக்கும் இந்த ஊடகங்கள், அமெரிக்காவில் வாழும் புலம்பெயர் குழு ஒன்றின் கஸ்ரோவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முதன்மைப்படுத்தின.

பிரித்தானிய பல்கலைகழக விரிவுரையாளர் ஒருவரின் நேர்முகத்தை ஒளிபரப்பிய பீபீசீ, அவரிடம் கஸ்ரோ ஒரு சர்வாதிகாரி என ஆரம்பித்ததுமே அதனை அவர் நிராகரிக்கிறார். பேராசிரியர், கலாநிதி டெனிஸ் பேடென் என்ற அக் கல்வியாளர், கியுப மக்களுக்கு பிடல் கஸ்ரோ ஒரு கதாநாயகன் எனக் குறிப்பிட்டார். தான் கியூபாவின் உள்ளே சென்ற போதே அங்குள்ள உண்மை நிலைமை என்ன என்பதையும், பேச்சுச் சுதந்திரம் எவ்வாறு மதிக்கப்படுகிறது என்பதையும், மக்கள் கஸ்ரோவை எவ்வளவு உயர்வாக எண்ணுகிறார்கள் என்பதையும் காணக்கூடியதாக இருந்தது எனக் குறிப்பிடுகிறார்.

பீபீசீ திட்டமிட்டபடி தாம் விரும்பிய பிரச்சாரத்தை மேற்கொள்ள இயலாத நிலையில், டெனிஸ் பேடனை நோக்கி, நீங்கள் கஸ்ரோ மீது அதிகம் விருப்புக்கொண்டவராகக் காணப்படுகிறீர்கள் என்று கேள்வியெழுப்பியது.

கியூபாவின் மனித உரிமை மீறல்கள் குறித்து கேள்வியெழுப்பிய போது, பொதுவாக கியூப மக்கள் கியூபாவின் சிறைகள் குவான்டனமோ பே ஐ விட மேலானது எனக் குறிப்பிடுகிறார்கள் என்றார்.

குவான்டனமொ பே என்பது கியூபாவின் எல்லையிலுள்ள அமெரிக்க சித்திரவதை முகாம் என்பது குறிப்பிடத்தக்கது.


கஸ்ரோவின் மரணம் சொல்லும் செய்தியும் அவரின் வரலாற்றுப் பாத்திரமும்

கோப்ரட் ஊடகங்களின் பொய்கள் : பீ.பீ.சீ நடத்திய ஊடக நாடகம்

சீனப் பொலிசிற்குக் காக்கி உடை அணிவித்த சீ.என்.என் ஊடகத்தின் பொய்

Exit mobile version