Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை:முதலாளித்துவத்தின் புதிய நெருக்கடி

பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே

பிரித்தானியாவில் வலதுசாரி பழமைவாத ரோரி கட்சியின் சிறுபான்மை ஆட்சியில் பல் தேசிய வியாபார நிறுவனங்களின் நலன்களுக்காக சமூக நலத் திட்டங்கள் அழிக்கப்பட்டு உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் வேலையற்றோருக்கான உதவித்தொகை குறைக்கப்படு அதனைப் பெற்றுக்கொள்வதற்கான வழிகள் சிக்கலாக்கப்பட்டது. குறைந்த வருமானமுள்ள உழைக்கும் மக்களின் நாளாந்த அடிப்படைஉணவுத் தேவையைக்கூடப் பூர்த்திசெய்ய இயலாத சூழல் உருவாகியிருப்பதாக சமூக ஆரவலர்கள் குற்றம் சுமத்த அரசு தரப்பிலிருந்து தெளிவான புள்ளி விபரங்கள் வெளிவரவில்லை.

ரொரி கட்சியின் சிக்கன நடவடிக்கைகளால் பாதிப்பிற்கு உள்ளானவர்களில் 86 வீதமானவர்கள் பெண்களே என்றும் இதனால் இதனால் உழைக்கும் மற்றும் ஏழைப் பெண்கள் குடும்ப அளவில் பல்வேறு சிக்கல்களை எதிர் இதனால் உழைக்கும் மற்றும் ஏழைப் பெண்கள் குடும்ப அளவில் பல்வேறு சிக்கல்களை எதிர் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் The Refuge என்ற அமைப்புத் தெரிவித்துள்ளது. குடும்ப உறவு என்பது வெறும் காசு பண உறவாகச் சுருங்கிய ஐரோப்பிய பிரித்தானியா போன்ற நாடுகளில் பண பலமற்ற பெண்கள் தமது குடும்பங்களில், குறிப்பாக கணவன் அல்லது வாழ்க்கைத் துணையிடமிருந்து பல்வேறு வன்முறைகளையும் எதிர்கொள்வதாகவும் அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான பெண்கள் வன்முறைகளையும் ஏற்றுக்கொண்டு கணவனுடன் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது.
இக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள குடும்பங்களுக்கான ஆதரவு அமைச்சர் கிட் மோல்ட்கவுஸ், அவை ஆதாரமற்றவை எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே, பாதிக்கப்படும் பெண்கள், அவர்களது குடும்பங்களுக்கான உதவித் தொகையைப் பிரித்து தனியாக வழங்குமாறு கோரலாம் எனத் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை குடும்பங்களில் பெண்களுக்கான வன்முறையை மேலும் தீவிரமடையச் செய்யும் என Women Aid என்ற அமைப்புத் தெரிவித்துள்ளது.

இந்தியா போன்ற இந்துத்துவா அடிப்படைவாதம் கோலோச்சும் நாடுகளில் பெண்கள் அடிமைகளாகக் கருதப்படும் அதே வேளை ஐரோப்பிய நாடுகளில் அவர்கள் நுகர்வுப் பண்டங்களாக்கப்பட்டுள்ளனர். இவை இரண்டுமே வெவ்வேறு தளங்களில் வன்முறையின் ஆரம்பமாக அமைகிறது.

Exit mobile version