புலம்பெயர் தமிழ் ஊடக்த்துறையின் எதிர்காலம் தொடர்பான சமூகப்பற்றுள்ள பலர் கேள்வியெழுப்ப ஆரம்பித்துள்ளனர். சரி, தவறு என்ற முரண்பாடுகளுக்கு அப்பால் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அப்பாலான வாதப்பிரதிவாதங்கள் புலம்பெயர் ஊடகங்களில் இடம்பெற்றிருந்ததைக் நிலை இன்று முற்றிலுமாக மாற்றமடைந்துள்ளது. முழு நேர ஊடகவியலாளர்களில் பலர் இன்று வேலையற்றவர்களாகவோ அன்றி வேறு வேலைகளை தெரிந்தெடுத்துக்கொண்டவர்களாகவோ காணப்படுகின்றனர். ஊடகத்துறை முழுவதுமாக அழிக்கப்பட்டு செய்திகளும் நிகழ்வுகளும் வெறுமனே நுகர்வுப் பண்டமாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
முழு நேர ஊடகவியலாளர்களின் அழிவும், ஊடகங்களின் இன்றைய நிலையும் ஆபத்தான எதிர்காலத்தின் முன்னறிவிப்பா என்ற அச்சம் பலர் மத்தியில் எழ ஆரம்பித்துள்ளன.
இணைய ஊடகங்கள் மரண அறிவித்தலுக்காகவும், இந்திய சினிமாவின் நுகர்விற்காகவும், பரபரப்புச் செதிகளுக்காகவும் மட்டுமே செயற்பட, காட்சி ஊடகங்களில் ஊடகவியலாளர்கள் காணாமல் போக ஆரம்பித்துள்ளனர்.
தமது அவல நிலை தொடர்பாக ஊடகவியாளர்கள் துணிச்சலுடன் பேச ஆரம்பித்தால் மட்டுமே புலம்பெயர் ஊடகத்துறையின் எதிர்காலம் தொடர்பான உரையாடலை காத்திரமான திசைய நோக்கி நகர்த்த முடியும்.