Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐ.பீ.சி இன் ரிஷியைப் பாதுகாக்கும் புலம்பெயர் தேசியக் கோமாளிகள்!

IBC-TAMIlபிரித்தானியாவிலிருந்து செயற்படும் தமிழ்த் தொலைகாட்சி நிறுவனமான ஐ.பீ.சி தமிழ் கடந்த சில வாரங்களுக்கு உள்ளாக ஒளிபரப்பிய நிகழ்ச்சி ஒன்று தொடர்பாக போட்டிக் குழுக்களின் விமர்சனம் இன்றைய புலம்பெயர் அரசியலில் சூடு பிடித்துள்ள விவகாரம். இலங்கையிலிருந்து ஐ.பீ.சி தொலைக்காட்சியின் செய்தியாளராகவும் அதன் பிரதிநிதியாகவும் தொழில் செய்யும் ரிஷி என்பவர் தயாரித்து வழங்கிய நிகச்சி ஒன்றில் இலங்கை இராணுவம் தொடர்பான நேர் ம்றையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருப்பதே போட்டிக் குழுக்களதும் அவர்களின் ஊடகங்களதும் கருத்து.

ரிஷி என்பவர் வன்னியில் விடுதலைப் புலிகள் கோலோச்சிய காலத்தில் அவர்களின் ஊடகத் துறையில் கனடாவிலிருந்து செயற்பட்டவர். புலிகளின் அழிவின் பின்னர் இனக்கொலையாளி கோத்தாபயவின் இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டார் என்ற உறுதியான தகவல்கள் நிழல் பட ஆதாரங்களுடன் வெளியாகியிருந்தன.

பரபப்பு என்ற அச்சு சஞ்சிகையை வெளியிட்ட அப்பட்டமான ஊடக வியாபாரி ரிஷி, ஐ.பீ.சி இன் இலங்கைப் பிரதிநிதியானதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் ஒளிந்திருக்கலாம். ரிஷி தயாரித்த நிகழ்ச்சியை ரூபவாகினி போன்ற அரச ஊடகங்களே ஒளிபரப்பத் தயக்கம் காட்டும் சந்தேகமில்லை.

இதற்காக ஐ.பீ.சி இன் பக்கமே தலைவைத்துப் படுக்கக் கூடாது என்று புலம்பெயர் நாடுகளின் இன்றை தலை போகிற அரசியல் என்ற கோதாவில் ‘தேசிய’ விசில்கள் போர்க் கொடியோடு இணையங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இறங்கிவிட்டன. அவர்களைப் பொறுத்தவரை, ஐ.பீ.சி என்பது இதுவரை தேசியத்தப் பாதுகாத்துவந்த, மக்களை அரசியல் மயப்படுத்தவதை மட்டுமே தனது தலையாய கடமையாகக் கொண்டிருந்த ஊடகம் என்றும் இன்று மக்கள் பணியிலிருந்து வழி தவறிச் செல்கிறது என்றும் கண் சிவக்கிறார்கள்.

பல மில்லியன்கள் செலவில் மேற்கு லண்டன் பகுதியில் உருவாக்கப்பட்ட ஐ.பீ.சி குறித்து நமது தேசியக் குஞ்சுகள் இவ்வாறான அபிப்பிராயத்தை வைத்திருந்தார்கள் என்றாலே அவர்களின் தேசியம் தொடர்பாக என்ன கருத்தை வைத்திருந்தார்கள் என்பது வெளியில் சொல்லக் கூச்சமான ஒன்று.

ஊடக சுதந்திரத்திலும், மக்கள் நலனிலும் அக்கறைகொண்டதாகக்கூறும் இவர்கள் லைக்கா மோபைல் நிறுவனம் ராஜபக்ச அரசுடன் உலாவித் திரிந்தபோதும், ராஜபக்சவைக் கொமன்வெல்த் தலைவராக்க லைக்கா பணம் வழங்கிய போதும், இலங்கை மக்களின் பணத்தை ராஜபக்சக்களுக்காக சுருட்டிய போதும் எங்கே சென்றிருந்தார்கள்? இனியொரு உட்பட சில ஊடகங்கள் லைக்காவினால் தாக்கப்பட்ட போது கை கால் எல்லாவற்றையும் கட்டி வாயைப் பொத்திக்கொண்டிருந்த இத் தேசியங்களுக்கு எங்கே ஊடக சுதந்திரத்தைப்பற்றித் தெரிந்திருக்கப்போகிறது.
இன்று தென்னிந்தியாவிலிருந்கு புலம்பெயர் நாடுகள் முழுவதும் ஒளிபரப்பாகும், விஜய் தொலைக்காட்சி போன்ற கலாச்சாரக் குப்பைகளின் அழிப்பு நடவடிக்களை தொடர்பாக இத் தேசியத் திருவிளையாடல்கள் எங்காவது குரல் கொடுத்திருக்கிறார்களா?

ஐ.பீ.சி என்பது பத்தோடு பதினோராவது ஊடகம் தான். அது புரட்சி செய்வதற்காக உருவாக்கப்பட்டதாக தேசியங்கள் எண்ணிக்கொண்டிருந்தது கோமாளித்தனம். ஆனால், இவர்கள் போட்டி நிறுவனங்கள் சார்ந்து ஐ.பீ.சி ஐ விமர்சிப்பது ஐ.பீ.சி இன் ரிஷியை விட ஆபத்தானது. ஐ.பீ.சி ரிஷியைத் தனது செய்தியாளராகத் தொடர்ந்து பேணுவது அந்த நிறுவனத்தின் குறித்தபகுதிப் பார்வையாளர்களை அன்னியப்படுத்தும் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாதது.

புலம்பெயர் தொலைதூரத் தேசியவாதம் பிற்போக்கானது என்றாலும் இலங்கை அரசிற்கு எதிரான உணர்வுகளைக் கொண்டுள்ளது. ஐ.பீ.சி. இன் ரிஷி அந்த உணர்வுகளை கேள்விக்குள்ளாக்கும் போதும் அவரைத் தொடர்ந்து பேணுவது ஐ.பீ.சி தொடர்பான பல சந்தேகங்களை ஏற்படுத்தும் என்பது வழமை. ஐ.பீ.சி இன் ஊழியர்களில் பலரே நிர்வாகத்தை இது தொடர்பாகக் கேள்வியெழுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லைக்கா தொடர்பான உண்மைகளை வெளிகொண்டுவந்த இனியொரு போன்ற ஊடகங்கள் ஐ.பீ.சி தொடர்பான விமர்சனங்களை முன்வைப்பதற்கு நியாயமான உரிமைகளைக் கொண்டுள்ளன. லைக்காவைச் சார்ந்து ஐ.பீ.சி ஐ விமர்சிப்பது ரிஷி போன்ற சீரழிந்த ஊடகவியாளர்களையும் பலப்படுத்துமே தவிர பலவீனப்படுத்தாது.

Exit mobile version