Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போராளிகளைக் காட்டிக்கொடுக்கும் புலம்பெயர் புலிப் பினாமி வியாபாரிகள்

ltte_b2ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் ஒரே நோக்கம் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை வென்றெடுப்பதும், சமூக விடுதலையை வெற்றிகொள்வதும் மட்டுமே. இது உலகம் முழுவதும் பெரும்பான்மையாகத் திகழும் பலம் மிக்க ஒடுக்கப்படும் மக்களுடன் இணைந்தே சாத்தியப்படுத்த முடியும். புலிகள் இயக்கத்தில் இணைந்து தமது வாழ்வை அர்ப்பணித்த போராளிகள் மக்களின் விடுதலைக்காகவே போராடினார்கள், அவர்களின் தியாகமும் அர்ப்பணமும் நமது சமூகத்தின் சொத்துக்கள்.

எஞ்சியிருக்கும் பெரும்பாலான போராளிகளில் பலர் தம்மை இன்றும் அர்ப்பணிக்கத் தயாராகவே உள்ளனர்.
சரி, தவறு என்ற விவாதங்களுக்கு அப்பால், ஒரு புறத்தில் புலியெதிப்பு அரச சார்புக் கும்பல்களும் மறு புறத்தில் புலிப் பினாமிக் கும்பல்களும் இப் போராளிகளின் அர்ப்பண உணர்வைத் தமது பிழைப்புவாத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினர்.

போராளிகளையும் மக்களையும் மேற்கு ஏகாதிபத்திய நாடுகளின் நோக்கங்களுக்கு ஏற்ப முள்ளிவாய்கால் வரை நடத்திச் சென்று அழித்த புலம்பெயர் பினாமி அமைப்புக்கள் மீதான தடையை இலங்கைப் பேரினவாத பாசிச அரசு நீக்கியுள்ளது.

தடை நீக்கப்படாத அமைப்புக்கள் தொடர்பாகத் தொடர்ந்து மறுபரிசீலமை செய்யப்படும் என அறிவித்துள்ளது.

இலங்கைப் பேரினவாத பாசிச அரசு இன்று ஏகாதிபத்தியங்களின் நேரடி அடியாள் படைகளால் நிர்வகிக்கப்படுகின்றது.

அப்பாவிச் சிறைக் கைதிகளை விசாரணையின்றி அடைத்து வைத்திருக்கும் இலங்கை அரசு புலம்பெயர் பிழைப்புவாதிகளின் மீதான தடையை நீக்கியுள்ளது. இலங்கை அரச அதிகாரத்திற்குச் சேவை செய்த இக் கும்பல்கள் இன்று தம்மை நிர்வாணமாகக் காட்டி நிற்கின்றன.

கைதிகளை எந்த முன் நிபந்தனையும் இல்லாமல் விடுதலை செய்யக் கோரி உலகம் தழுவிய மக்கள் போராட்டத்தை மேற்கொள்ளவும் இலங்கைப் பேரினவாத அரசு தொடர்பாக உலக மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொள்ளவும் வக்கற்ற இந்த அமைப்புகள் தமது தடை நீக்கத்தை கொண்டாடிக்கொண்டிருப்பார்கள்.

புலம்பெயர் அமைப்புக்கள் போராள்களைக் காட்டிக்கொடுத்துள்ளன. ஐரோப்பிய நாடுகளில் அகதி உரிமை கோரி விண்ணப்பித்த பல போராளிகள் மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஏகாதிபத்திய நாடுகளுடன் இணைந்து ராஜபக்சவைத் தண்டிக்கப் போவதாகப் படம் காட்டிய இந்த அமைப்புக்கள் போராளிகள் மீது போர்க்குற்றம் சுமத்தப்படும் போது அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்தன. இன்று இலங்கைப் பேரினவாத அரசைக் குளிர்ர்சிப் படுத்தியுள்ளன.

Exit mobile version