காலனியத்திற்குப் பின்னய காலம் முழுவதும் தமிழ் நாடு தனித்தே செயற்பட்டது.
தமிழ் நாட்டின் எழுதப்படாத கோட்பாடாக திராவிடம் தோன்றியது. நிலப்பிரபுத்துவத்தைக் பேணிப் பாதுகாத்த பார்ப்பனிய மதவாதத்திற்கு எதிரான முதலாளித்துவ தேசியமாகத் தோன்றிய திராவிடக் கோட்பாடு நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான தனது யுத்தத்தைப் பிரகடனப்படுத்தியது.
இன்றுவரைகும் பின் தங்கிய பார்ப்பனிய நிலப்பிரபுத்துவக் கோட்ப்பாடிற்கு எதிரான கருத்தியலாக தனித்து நிற்கும் திராவிடக் கோட்பாட்டை மதவாத ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், அதன் அடியாள் அமைப்பான பி.ஜே.பி உம் அழிப்பதை தமது முதன்மையான நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளன.
நேற்று 21.11.2020 அன்று தமிழ் நாட்டில் வந்திறங்கிய ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரும் இந்தியாவின் உள்துறை அமைச்சருமாமான அமித் ஷா இற்கு எதிரான தமிழக மக்களின் போராட்டம் விமான நிலையத்திலேயே ஆரம்பித்துவிட்டது. அமித் ஷாவை நோக்கி Go Back Anit Sha என்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பாதாகையை வீசியெறிந்த ஒருவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.
தேர்தல்களில் வெற்றிகொள்ள வாக்காளர்களை நம்பியிராமல் ,மக்கள் மத்தியில் வன்முறைகளை உருவாக்குவாக்குதல், தனி நபர்களை மிரட்டுதல் போன்ற சீர்குலைவு நடவடிக்கைகளேயே நம்பியிருக்கும் அமித் ஷா இற்கு எதிரான டிஜிடல் போராட்டத்தில் Go Back Amit Sha என்ற முழக்கம் இந்தியாவில் முன்னிலை வகித்தது.
எது எவ்வாறாயினும், தமிழ் நாட்டில் திராவிடக் கோட்பாட்டையும் அதனை முன்வைக்கும் அரசியலையும் அழிக்கும் முயற்சியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அரசியல் நீக்கம் செய்வதில் ஆர்.எஸ்.எஸ் ஓரளவு வெற்றி கண்டுள்ளது. நேற்றைய அமித் ஷா இன் வருகையை பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு முன்னால் நின்று அ.தி.மு.க வரவேற்ற நிகழ்வானது, இந்த அரசியல் நீக்கத்தை வெளிப்படையாக உணர்த்தியது.