பெரும் பணச் செலவில் நடத்தப்படும் தொலைக்காட்சி சேவைகள் இன்று தமிழ்ப் பல்தேசிய வியாபார நிறுவனங்களில் பிடியிலேயே உள்ளன.
மில்லியன்கள் புரளும் உதைபந்தாட்ட நிறுவனங்களைப் போன்றே தமிழ்த் தேசியம் வியாபார நிறுவனமாகிவிட்டது.
இவற்றின் மத்தியில், புலம்பெயர் நாடுகளில் நீண்ட வரலாற்றைக் கொண்ட தீபம் தொலைக்காட்சி புதிய வியாபர உக்தியைக் கையாள ஆரம்பித்துள்ளது.
துரைசாமி பத்மநாபன் என்ற தமிழ் மில்லியேனரால் ஆரம்பிக்கப்பட்ட தீபம் தொலைக்காட்சி, நோர்வேயைச் சேர்ந்த தீவிர தமிழ்த் தேசியவாதிகள் என்று தம்மை அழைத்துக்கொண்டவர்களால் வாங்கப்பட்டது. அதன் பின்னர் தீபத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் நீக்கப்பட்டனர். அவர்கள் தமக்கான ஊதிய நிலுபையைப் பெற்றுக்கொள்ள நீண்ட காலப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தமை பழைய வரலாறு.
தமிழ்த் தேசியம் பேசிய தீபத்தின் நிகழ்ச்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இனத் துரோகிகள் என்று கூறும் எல்லை வரை சென்று விமர்சித்தது.
தமிழீழமே தமது உயிர்த்துடிப்பு என அறிவித்தது.
இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார செய்தி இதழ் ஒன்றை தீபம் நடத்துகிறது. இலங்கையில் அச்சிட்டு வெளியாகும் இச் செய்தி இதழின் ஆக்கங்கள் முழுவதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார நோக்கங்களை நிறைவு செய்கிறது. பணம் அறவிடப்படாமல் இலவசமாகவே இச் செய்தி இதழ் வழங்கப்படுகிறது.
இதற்கான பணச் செலவுகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கிவருகிறதா, தன்னார்வ நிறுவனங்கள் -NGOs- பண உதவிகள் வழங்கினவா அன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கால முழக்கங்களில் மயங்கிய அதன் உரிமையாளர்கள் தமது சொந்தச் செலவில் வெளியிடுகின்றனரா என்பது தெளிவில்லை.
தீபம் தொலைக்காட்சியின் தமிழ்த் தேசிய முழக்கங்க்ள் 180 பாகையில் திரும்பி இப்போது எதிர்த் திசையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது.
திபத்தின் இலவச பிரதி இங்கே இணைக்கப்பட்டுள்ளது: