Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சீ.வீ.விக்னேஸ்வரனுக்கு பிறந்த நாள்: அவரால் பாதிக்கப்பட்ட மக்கள் அவலத்தில்

C.V.-Wigneswarenவடக்கு மாகாண சபையின் முதலமைச்சரும் முன்னை நாள் இலங்கை நீதிபதியுமான சீ.வீ.விக்னேஸ்வரனுக்கு இன்று பிறந்த நாள். சமூக வலைத் தளங்களில் புலம்பெயர் தேசியவாதிகளின் வாழ்த்துக்கள் அவரை நோக்கிக் குவிகின்றன. அதே வேளை சுன்னாகம் அனல் மின் நிலையத்தில் நடத்தப்பட்ட சட்டவிரோத மின்னுற்பத்தியின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் கைவிடப்பட்டுள்ளனர். சுன்னாகம் அனல் மின் நிலையத்திலிருந்து மக்கள் குடியிருப்புக்களை நோக்கி வெளியேற்றப்பட்ட அதிபாரக் கழிவு டீசல் பல மைல்கள் தொலைவிலான நீரையும் நிலத்தையும் நாசப்படுத்தியுள்ளது. நிலத்தடியிலுள்ள சுண்ணாம்புப் படுக்கைகளில் நச்சுப் படிந்து நிரந்தரமாகி வருகிறது. சுற்றிவர உள்ள விவசாய நிலம் பயிர்ச்செய்கைக்கு உதவாத நிலையை எட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களில் பலர் நோய் வாய்ப்பட்டுள்ளனர்.

இதற்கான பொறுப்பையும், நீரைச் சுத்திகரிப்பதற்கான நடவடிக்கையையும், மக்களுக்கான இழப்பீட்டையும் மின்னிலையத்தை நடத்திய எம்.ரி.டி வோக்கஸ் என்ற நிறுவனமே வழங்க வேண்டும் என்ற குரல்கள் பரவலாக எழுந்தன. இந்த நிலையில் முதலமைச்சர அமைத்த ஆணைக்குழு நீரில் நஞ்சு இல்லை என்ற அறிக்கையை வெளியிட்டுவிட்டுக் காணாமல் போய்விட்டது.

முதலமைச்சரின் ஆணைக்குழுவத் தவிர, பல்வேறு அறிக்கைகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இலங்கை அரசே நிலக்கீழ் நீர் ,மாசடந்தமைக்கு சுன்னாகம் உற்பத்தியே காரணம் என ஒப்புக்கொண்டிருந்தது.

சுன்னாகம் அனல் மின் நிலையத்தை நடத்திய எம்.ரி.டி வோக்கஸ் என்ற பல்தேசிய வியாபார நிறுவனம் முதலமைச்சரால் பாதுகாக்கப்பட்டு மக்கள் தெருவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தனது பிறந்த நாளான இன்று வட மாகாண முதலமைச்சர் தனது தவறுகளை உணர்ந்து சொந்த மக்களைப் பாதுகாக்குமாறு வாழ்த்துகிறோம்.

புலம்பெயர் பிழைப்புவாதிகளுகுத் தீனி போடும் வகையில் தீர்மானம் நிறைவேற்றுவதும் அறிக்கைகள் வெளியிடுவதும் சுன்னாகம் நஞ்சைக் கழுவிவிடாது.

சுன்னாகம் நிலக்கீழ் நீர்: விக்னேஸ்வரன் யாரைப் பாதுகாக்க முயல்கிறார்?
சுன்னாகம் பேரழிவு: நிர்ஜ் தேவாவின் புறமுதுகும், வடமாகாண சபைத் தீர்மானமும்
சுன்னாகம் பேரழிவு:ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்குத் தடைவிதித்த கூட்டமைப்பின் மாகாண அரசு
சுன்னாகத்தில் வாழ்ந்தவர்களின் நரம்பு மண்டலம் பாதிப்படையலாம்: சம்பிக்கவும் தேவாவும் பொறுப்பு
யாழ்ப்பாணத்தை நஞ்ச்சாக்கும் நிறுவனத்தின் இயக்குனர் பிரித்தானியாவில்:புலம்பெயர் அமைப்புக்கள் எங்கே?
சுண்ணாகம் நீர் மாசடைதல் தொடர்பான முதலாவது ஆய்வுக் கட்டுரை வெளியீடு
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பிரித்தானியத் தலையீடு:வெளிவராத உண்மைகள்
யாழ்ப்பாணத்தில் அகதிகளாக்கப்படும் மக்கள் : பண வெறியும் பாசிசமும்
யாழ்ப்பாண நீர் மாசடைதலில் அறிவியல், அரசியல் மற்றும் சூழ்ச்சியான செயற்பாடுகள்:வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்

http://www.usnews.com/opinion/blogs/clark-judge/2013/02/19/the-next-big-wars-will-be-fought-over-waterhttp://www.theguardian.com/environment/2014/feb/09/global-water-shortages-threat-terror-warhttp://www.un.org/waterforlifedecade/scarcity.shtmlhttp://www.unwater.org/publications/publications-detail/en/c/204294

http://www.bloomberg.com/news/articles/2010-12-22/amcorp-genting-knm-group-mtd-capital-malaysia-equity-previewhttp://www.ft.lk/2015/03/23/mtd-walkers-optimistic-further-investigations-will-vindicate-baseless-accusations/http://www.ft.lk/2015/03/23/mtd-walkers-optimistic-further-investigations-will-vindicate-baseless-accusations/

 

Exit mobile version