Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முகத்தில் அறைந்த கியுப மக்கள்!.

cubanpublicஇன்று கியூபாவில் பிடல் கஸ்ரோவின் மரணச் சடங்கு அனுட்டிக்கப்பட்டது. அண்மைக காலத்தில் உலகின் எந்தத் தலைவரும் திரளாத அளவிற்கு மக்கள் வெள்ளம் திரண்டிருந்ததை அமெரிக்க ஊடகங்களே ஒப்புக்கொண்டன. பிடல் கஸ்ரோவின் மரணத்தின் பின்னர் கியூப மக்கள் மகிழ்ச்சியடைந்திருப்ப்பதாகப் பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபட்டுவந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களும், அந்த நாடுகளின் ஆளும் வர்க்கங்களும் வாயடைத்துப் போகும் அளவிற்கு உணர்வுபூர்வமான மக்களின் பங்களிப்பு தலைநகர் ஹவானவைச் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.
இளைஞர்களின் அழு குரல்களும், சோகம் நிறைந்த முதியவர்களும் தலை நகரின் புரட்சி சதுக்கத்தில் குழுமி கியூபாவின் அரசியலைத் தலைமை தாங்கிய போராளி பிடல் கஸ்ரோவை நினைவு கூர்ந்தனர். நாடு முழுவதும் எடுத்துச் செல்லப்படும் கஸ்ரோவின் அஸ்தி முதல் நாளாக இன்று (30.12.2016) ஹவானாவில் வைக்கப்பட்டிருந்தது.
ஹவானாவின் மொத்த சனத்தொகை 2.1 மில்லியன்கள். மரணச்சடங்கில் கலந்துகொண்டவர்களின் தொலை 1 மில்லியன்களுக்கு மேலாக இருக்கலாம் என கனேடிய ஊடகமான சீபீசீ அறிவித்திருந்தது.
கடந்த ஐந்து தசாப்தமாக கியூபாவின் சோசலிச அரசிலமைப்பபைப் பாதுகாத்த புரட்சிக்காரன் பிடல் கஸ்ரோவின் மரணச் சடங்கில் கலந்துகொள்ள ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து பொதுவாக அனைத்துத் தலைவர்களுன் கலந்துகொண்டனர்.
அமெரிக்காவின் கொல்லைப்புறத்தில் அமைந்திருக்கும் கியூப மக்களின் உணர்வுகளை மதித்து, உலகின் சிறந்த ஜனநாயக நாடு என மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்க பயங்கரவாத அரசு தமது பிரதிநிதிகளை அனுப்ப மறுத்துவிட்டது.
நமது காலத்தில் சரணடைவிற்கும் விட்டுக்கொடுபிற்கும் அப்பால் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை இறுதிவரை முன்னெடுத்த கஸ்ரோவின் பக்கமே மக்கள் என்பதை இன்றைய நிகழ்வுகள் நிரூபணமாக்கின. இன்னும் மிக நீண்ட காலத்திற்கு கியூபா மக்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை உறுதி குலையாமல் தொடர்வார்கள் என்பதை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முகத்திலறைந்து அந்த நாட்டின் மக்கள் கூறியுள்ளார்கள்.

Exit mobile version