இதன் மறு புறத்தில் சுன்னாகத்திலிருந்து பலமைல் தொலைவு வரையும் நாசப்படுத்திய எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்தையும் அதனைச் சுற்றியிருந்த சதிகாரக் கும்பல்களையும் ‘தமிழ்த் தேசியம்’ இதுவரை கண்டுகொண்டதில்லை.
போர்க்குற்ற விசாரணையைப் புலிகளின் குற்றங்களிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என சுற்றுச் சூழல் கிரிமினல் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கொக்கரித்துள்ளார்.
பிரபாகரன் , பொட்டு அம்மான் உயிரிழந்தாலும் அவர்களுக்கு நிதி உதவி வழங்கியவர்கள், ஆயுதங்களை வழங்கியவர்கள், வாகனங்களை வழங்கியவர்கள், ஆலோசனை வழங்கியவர்கள் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமது எல்லைக்குள்ளேயே வாழும் நிர்ஜ் தேவாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அனைத்துச் சந்தர்ப்பங்களும் இருந்தும் பிரித்தானிய தமிழ்த் தேசியப் பிழைப்புவாதிகள் அது குறித்துப் பேசுவது கிடையாது.
சம்பிக்க ரணவக்க, நிர்ஜ் தேவா ஆகியோருக்கு எதிராகவும் பிரித்தானியாவில் தனது வியாபார நடவடிக்கைகளை விரிவுபடுத்திவரும் எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்திற்கு எதிராகவும் சட்டரீதியான நடவடிக்களை முன்னெடுகுமாறு தமிழ் அமைப்புக்களுக்கு நேரடியாககவும் பகிரங்கமாகவும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இன்று கோண்டாவில், கொக்குவில், திருநெல்வேலி போன்ற பகுதிகள் வரை சுன்னாகம் நச்சுப் பொருட்கள் பரவி மக்களைச் சிறுகச் சிறுக அழித்துவருகின்றது.