Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பவுண்ட்ஸ் விலை மேலும் வீழ்ச்சியடையும், பிரித்தானியாவின் கடன் மதிப்பீட்டுத் தரம் குறைக்கப்பட்டது!

poundsஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதென அதிகமான பிரித்தானியர்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து அந்த நாட்டின் கடன் மதிப்பீட்டுத் தரம் குறைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் தரம் AAA இலிருந்து AA ஆக தரமிறக்கப்பட்டுள்ளது. Standard & Poor’s என்ற தர நிர்ணைய முகவர் உலக நாடுகளில் பெரும்பாலானவற்றிற்குத் தர நிர்ணையம் மேற்கொள்ளும் முகவர் நிலையமாகும். அதன் போட்டி நிறுவனமான Fitch உம் AA+ இலிருந்து பிரித்தானியாவை AA இற்குத் தரமிறக்கியுள்ளது.

Fitch நிறுவனம் இது தொடர்பாகத் தெரிவிக்கையில், ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி குறைவடைவதாலும், வெளி நாட்டுக் குடிவரவாளர்கள் குறைவடைவதாலும், வெளிநாட்டு நேரடி முதலீடுகள் குறைவடைவதாலும் பொருளாதார வளர்ச்சி குன்றும் என்பதால் தரமிறக்க வேண்டிய தேவை ஏற்பட்டது என்கிறது.

இத் தர நிர்ணையத்தைத் தொடர்ந்து பிரித்தானிய பங்கு சந்தையில் 100 பில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ் தொகை வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் பிரித்தானிய பவுண்ஸ் இன் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு வெளிநாட்டு குடிவரளர்களால் பிரித்தானியப் பொருளாதாரத்திற்கு வலுச் சேர்க்கப்படுகிறது என்பதை முதல் தடவையாக உலக நிறுவனம் ஒன்று ஒப்புக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்விளைவாக பிரித்தானியாவில் குறுகிய காலப் பொருளாதார நெருக்கடி ஒன்று தோன்றலாம்.

Exit mobile version