Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொரோனா தொற்றாளர்களைச் சுட்டுப் படுகொலை செய்த இலங்கை அரசு: அச்சம் தரும் எதிர்காலம்!

உறவினரின் உடலைக் கேட்டு போலிசின் காலடியில்
உறவினரின் உடலைக் கேட்டு போலிசின் காலடியில்

இலங்கை அரசு 2021 நிதியாண்டின் நடுப்பகுதியில் கொரோனா நோய்த் தொற்றிற்கான தடுப்பூசியைக் கொள்வனவு செய்ய உத்தேசம் உள்ளதாக அறிவித்துள்ளது. ராஜபக்ச குடும்பத்தின் சர்வாதிகார அரசு கோரோனா நோய்த் தடுப்பிற்கான எந்த எதிர்கால நடவடிகையும் முன்னெடுக்காத நிலையில், மகரகம சிறைச்சாலையில் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டு இலங்கை அரசால் 01.12.2021 அன்று படு கொலைசெய்யப்பட்ட 11 கைதிகள் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததாக முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். காயமடைந்துள்ள பல கைதிகள் இன்னும் சிறையிலேயே அடைத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனவும் கரு ஜெயசூரிய மேலும் தெரிவிக்கிறார்.

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களைச் சூட்டுக் கொலை செய்த ஒரே நாடு இலங்கை தான் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

வன்னியில் சாரிசாரியாக மனிதப் படுகொலைகளை நடத்திய அதிகாரிகளும் ஜனாதிபதியும் இன்றைய ஆட்சியில் நிறைவேற்று அதிகாரத்தைக் கையகப்படுத்தியுள்ளதன் பலனே நேற்றைய தாக்குதலின் ஊற்றுமூலம்.

2019 ஆண்டு இலங்கை அரசு மருத்துவத் துறைக்கு 178 பில்லியன் ரூபாக்களை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கியிருந்தது. 2020 ஆம் நிதியாண்டில் இத் தொகை 159 பில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ள்து. பொதுவாக உலக நாடுகள் அனைத்தும் சராசரியாக தமது வரவு செலவுத் திட்டத்தில் மருத்துவத் துறைக்கு முன்னைய ஆண்டைவிட 10 மடங்கு நிதியை ஒதுக்கியிருந்ததன.

இலங்கை அரசின் இந்த நிதி ஒதுக்கீட்டின் பின்புலத்தில் கொரோனா தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்கான நோக்கமோ திட்டமோ இருப்பதாகத் தெரியவில்லை. மொத்த சனத்தொகையின் 20 வீதமானவர்களுக்கு மட்டும் உலக சுகாதார நிறுவனம் தடுப்பூசியை வழங்குவதாகத் தெரிவித்துள்ள நிலையில் ஏனைய 80 வீதமான சிங்கள உழைக்கும் மக்களுக்கும், சிறுபானமைத் தேசிய இனங்களுக்கும் மகரகம சிறைச்சாலையின் நிலை ஏற்படுமான என அச்சம் மக்கள் மத்தியில் உருவாக ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பாக பேசுவதற்குத் தமிழ் அரசியவாதிகள் எவரும் தயாரில்லை. முன்னைநாள் மண்டையன் குழுவின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் புலிகளுக்கு எதிரான சுமந்திரன் எப்படி மாவீரர் தினத்தைக் கொண்டாடலாம் என விசனம் தெரிவிக்கிறார். அரசுக்கு எதிரான அரசைப் பலவீனப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் திசைதிருப்பும் நோக்கில் இலங்கை முழுவதும் தமிழர்களுக்கே சொந்தம் என்றும், சிங்களம் இந்த நாட்டின் மொழியல்ல என்றும் ஒரு பகுதி கூற மறுபகுதி சிங்களப் பேரினவாதிகள் இவர்களைத் தாக்குவது போன்றும் நடத்தும் நாடகத்தில் ராஜபக்ச சர்வதிகாரம் நிலை நிறுத்தப்படுகிறது.

Exit mobile version