Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானியாவில் நாளாந்தம் அதிகரிக்கும் உயிர்பலி:தடுப்பூசி தொடர்பாக அதிகரிக்கும் சந்தேகங்கள்

நேற்று 19.01.2121 பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால் மருத்துவ மனையில் இறந்தவர்களின் தொகை 1610, கடந்த ஒரு வாரத்தில் மரணைத்தவர்களின் தொகை 8267.தொற்று ஆரம்பித்த நாளிலிருந்து இதுவே அதிக தொகை என அரசு அறிவித்துள்ளது. தவிர 33,355 புதிய தொற்றாளர்கள் அறிவிக்கப்பட்டுளனர். இத் தொகை 8ம் திகதி பதியப்பட்ட 68,053 விட குறைவானதாகும். 4,266,577 பிரித்தானியர்கள் இதுவரை தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். அதே வேளை பைசர் நோய்த் தடுப்பூசி தொடர்பாக நோர்வே அரசு தனது கவலையைத் தெரிவித்துள்ளது. பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட வயதான 29 நோர்வேஜியர்கள் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் அதே வேளை, அவர்கள் வேறு நோய்களுக்கு ஏலவே உட்பட்டிருந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 42,000 மக்களுக்கு நோர்வேயில் தடுப்பூசி வழங்கப்பட்டதில் 29 பேரின் உயிரிழப்பு அதிகமனது என நோர்வே அரசு தெரிவிக்கிறது. நோர்வே அரசு புலூம் பேர்க் செய்தி நிறுவனத்திற்கு எழுத்து மூலம் தெரிவித்த அறிக்கையில் அத்தனை குறித்த இறப்புக்களுக்கும் தடுப்பூசிக்கும் தொடர்புகள் உள்ளதாகக் கூறியுள்ளது.

அதே வேளை இஸ்ரேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒருவர் மற்றவருக்கு தொற்றை காவும் அளவு குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

13 பேருக்கு முகம் சார்ந்த பகுதிகள் சில மணி நேரம் வரை இயக்கமற்றுப் போவதாக இஸ்ரேலிய மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

எது எவ்வாறாயினும் உலகில் எந்த அரசும் மருத்துவ அறிவியல் துறை சார்ந்தவர்களைக் கொண்ட இலாப நோக்கமற்ற மக்கள் சார்ந்த குழுக்களை இதுவரை கோரோனா தொற்று தொடர்பான ஆய்வுகளுக்காக முன்வைக்கவில்லை. மருந்தைக் கண்டுபிடித்து இலாபமீட்டும் நோக்கத்தைக்கொண்ட பெரும் மருந்து நிறுவனங்களுக்கு மக்களின் வரிப்பணத்தைத் தாரைவார்த்த அரசுகள் மக்களுக்கனவை அல்ல என்பதை மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்

Exit mobile version