Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான விசாரணைக்கு கருணா அழைக்கப்படலாம்

karuna2006 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் ஜோசெப் பரராஜசிங்கம் எம்.பி ஐச் சுட்டுக் கொலைசெய்த குற்றத்திற்காக புலனாய்வுப் பிரிவினால் விசாரணை செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான பரராஜசிங்கத்தின் கொலையில் கருணாவிற்கு நேரடித் தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

வலதுசாரி வன்முறையை அடிப்படையாகக்கொண்டு வளர்ச்சிபெற்ற விடுதலைப் போராட்டத்தின் மற்றொரு விளைபொருளே கருணா.

வன்முறைகளையும், போராட்டத்தின் வலதுசாரி அரசியலையும் விமர்சனத்திற்கு உட்படுத்துவதன் ஊடாகவே புதிய மக்கள் சார்ந்த அரசியலை முன்வைக்க முடியும். கருணாவின் தோற்றம் தற்செயலானதல்ல. வரலாற்று வழிவந்த வலதுசாரி அரசியல் தவறுகளே கருணா உட்பட ஏகாதிபத்திய ஒட்டுக்குழுக்களையும் உருவாக்கியுள்ளது.

தமிழ் ஏகாதிபத்திய சார்பு அதிகாரவர்கம் சிங்கள அதிகாரவர்க்கத்தோடு இணைந்து நடத்தும் கொலைகளின் ஒரு பகுதியே கருணாவின் கொலை அரசியலும்.

முழுமையான போராட்டத்தையும் அதனைச் செழுமைப்படுத்தும் நோக்கில் விமர்சனம் செய்து புதிய அரசியலை முன்வைக்கத் தவறினால், எதிரிகள் அதனைப் பயன்படுத்திக்கொள்வர்கள்.

Exit mobile version