அமெரிக்க உளவுத் துறையான சீ.ஐ.ஏ இன் இயக்குனர் ஜோன் ஓ பிரேனன் பிரஞ்சு உளவுத்துறையின் இயக்குனரான பெர்னார்ட் பஜோலே ஐ தாக்குதல்களுக்கு முன்னதாக சந்தித்ததாக பிரஞ்சு தொலைக்காட்சியான கனல் புலூஸ் இன் வெள்ளை மாளிகைக்கான செய்தி தொடர்பாளர் லோறா ஹயீம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அச் சந்திப்பில் இஸ்ரேலிய மோசார்ட், பிரத்தானிய எம்.ஐ 6 ஆகியற்றின் முன்னை நாள் பிரதானிகள் கலந்துகொண்டனர்.
உலகின் முன்னேறிய உளவுத் தொழில் நுட்பமும், வரலாறு முழுவதும் போர் அனுபவமும் கொண்ட பிரன்ஸ் நாட்டின் உளவுத்துறைகளை மீறி பாரிஸ் நகரம் முழுவதும் ஒரு சிறிய தலைமறைவு ஆயுதக் குழு ஆயுதத் தாக்குதல்களை நடத்தியது எப்படி என பலர் கேள்வியெழுப்புகின்றனர்.
முன்னதாக சார்லி எப்டோ மீதான தாக்குதல்கள் பிரஞ்சு உளவுத்துறையின் அனுசரணையுடன் அமெரிக்கா நடத்தியதாக பல்வேறு ஆய்வுகள் வெளியாகியிருந்தன.
குளோபல் ரீசேர்ச் வெளியிட்ட ஆய்வு ஒன்றில் அமெரிக்க நேச அணியிலிருந்து விலகிச் செல்லும் மத்திய ஐரோப்பிய நாடுகளை மீண்டும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற தலையங்கத்தில் தன்னுடன் இணைப்பதற்கு அமெரிக்கா முயல்வதாகவும், அதன் அடிப்படையில் இவ்வாறான தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்தியிருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மத்திய கிழக்கில் போர்ச் சூழலை ஏற்படுத்துவதற்காக நேட்டோ நாடுகளால் தோற்றுவிக்கப்பட்டு வழி நடத்தப்படும் ஐ.எஸ்.ஐ.ஏஸ் என்ற அமைப்பு மேற்கு நாடுகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதாகக் கூறுவது வேடிக்கையானது.