Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வலிகாமம் பகுதியில் அனைத்துக் கிணறுக்களிலும் எண்ணை : ஆய்வு முடிவுகள்

oil-well-teat-reportவலிகாமம் பகுதியில் ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலுமுள்ள பகுதிகளில் 30 மாதிரிக் கிணறுகளில் இரசாயனப் பதார்த்தங்களுக்கான பரிசோதனை கடந்த மார்ச் மாதம் செய்யப்பட்டது. இதன் முடிவில், அனைத்துக் கிணறுகளிலும் எண்ணை மற்றும் கிரீஸ் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வட மாகாண சபை நடத்திய ஆய்வுகளிலும், சுன்னாகம் அனல் மின் நிலையத்தை நடத்திய எம்ரிடி வோக்கஸ் தெரிவித்த கருத்துக்களிலும் கிணறுகளில் எண்ணை இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்போது நீரைப் பயன்படுத்த வேண்டாம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

வட மாகாண சபையின் ‘தேசியக் கழிவுகள்’ இனியாவது மக்களிடம் மன்னிப் கோராவிட்டால் இலங்கை அரச பாசிஸ்டுக்கள் மக்கள் மத்தியில் ஊடுருவ இப்பிரச்சனை வடிகாலாக அமையும்.

மேலும் அப்பிரதேசத்தை இந்த நிலைக்கு உட்படுத்திய நிறுவனமும், அதன் பின்னணியில் செயற்பட்ட அரச அதிகாரிகளும் அமைச்சர்களும் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே ‘தமிழ்த் தேசியக்’ கட்சிகள் அரசியல் வளர்க்கலாமே?

Exit mobile version