சுன்னாகத்தில் அனல் மின் நிலையத்தை நடத்திய எம்.ரி.டி வோக்கஸ் என்ற நிறுவனத்தின் நடவடிக்கைகளை நல்லாட்சியின் பெயரால் கண்டித்த இலங்கை அரசு சுன்னாகம் மக்களுக்கு நட்ட ஈடு பெற்றுக் கொடுப்பதாகவும் கூறி வந்தது.
எம்.ரி.டி வோக்கஸ் இன் இயக்குனர்களில் ஒருவரும் பிரித்தானிய ஆளும் கட்சியின் உறுப்பினருமான நிரஞ்சன் தேவா என்ற சுற்றாடல் கிரிமினல் இன்றைய இலங்கை அரசின் ஆலோசகர். ரனிலின் நண்பரான தேவா கொழும்பில் ஐந்து நட்சத்திர உணவகம் ஒன்றைத் ஆரம்பித்துள்ளார்.
ரனில் ஆட்சிக்கு வந்ததும் நிர்ஜ் தேவா சிறீலங்கன் ஏயர் லைன்சின் இயக்குனர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டார்.
கடந்தவாரம் எம்.ரி.டி வோக்கஸ் கொழும்புத் துறைமுகம் எம்.ரி.டி வோக்கஸ் இற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கப்பல்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு எண்ணையைக் சுற்றாடலுக்குப் பாதிப்பற்ற வகையில் அகற்றும் வியாபாரத்தில் இந்த நிறுவனம் ஈடுபட்டுவந்தது. சுன்னாகத்தில் அழிவுகளை ஏற்படுத்துவதற்கு இந்த எண்ணையைப் பயன்படுத்தியிருக்கலாம் என இனியொருவில் ஏற்கனவே சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.
முன்னைய அரசுகளைப் போலன்றி மிகவும் நுணுக்கமான ஊழலில் ஈடுபடும் மைத்திரி – ரனில் அரசு இலங்கையின் முழு மக்களையும் சூறையாடிவருகிறது.