Chop Shop (2007)
Directed by Ramin Bahrani
Produced by Lisa Muskat, Marc Turtletaub & Jeb Brody
Written by Ramin Bahrani & Bahareh Azimi
Director of Photography, Michael Simmonds
Edited by Bahran
ஏன்ஞ்ல் ஒலிவிராஸ் என்ற நான்கு வயது குழந்தை அமெரிக்காவின் நியு மெக்ஸிக்கோ மாநிலத்தின் மிளகாய் தோட்டத்தில் வேலை பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புறுஸ் லோரன்ஸ் என்ற எட்டு வயது சிறுமி கடந்த
சி.ஜ.ஏ அறி;க்கையின் படி 50,000 போ ;இதில் 5 வீதம் குழந்தைகள் (மீதி பெண்கள) அமெரிக்காவிற்கு ஓவ்வொரு வருடமுமட கடத்திவரப்பட்டுகின்றனர். இ.வர்கள் .இலங்கை, சீனா, தாய்லாந்து. மெக்சிக்கோ, ஆபிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து கடத்திவரப்பட்டுகின்றனர்.
1997 ன் அறிக்கையின் படி சுமார் 290,000 சிறுவர்கள் அவ்வாண்டில் சட்டத்திற்கு புறம்பாக வேலை செய்கின்றனர்.
10 வருடங்களுக்கு முன்பாக சுமார் 100,000 சிறுவர்கள் அமெரிக்காவில் மட்டும் குழந்தை பாலியல் தொழிலாளிகளாக உள்ளனர். இவையாவும் அமெரிக்க ஊடகங்களுடாக வெளியான விபரங்கள்.
நியு யோர்க் நகரத்தின் ஜந்து பகுதிகளுள் (Manhattan, Bronx, Brooklyn, Queens. Staten Island) ஒரு பகுதி Queens- இராணி. 56 வீதமான இப் பகுதி மக்கள் வெள்ளையரல்லாதவர். இப் பகுதி வறுமைக் கோட்டின் கீழ்; வாழ்பவர்களை பெருமளவு கொண்டது. 2007 ன் கணக்கெடுப்பின் படி மொத்த நியு யோர்க் மாநிலத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் 13.7 வீதம், இதில் குயின் பகுதியில் மாத்திரம் 12 வீதமானோர் வாழ்கின்றனர். மன்காட்டன் பகுதியில் உள்ள அதி உயர் கட்டிடங்கள் இப் பகுதியை உலகத்திலிருந்து மறைத்துவிடுகின்றது. உலகத்திற் கெல்லாம் அரசன் அமெரிக்கா. குழந்தை தொழிலாளிகள் பற்றி மூன்றாம் உலக நாடுகளை திட்டி தீர்க்கின்றது அமெரிக்கா. குழந்தை போராளிகள் பற்றியும் பொங்கி எழுகின்றது. தனது நாட்டில் தனது நிழல் நகர் நியு யோர்க்கில் பற்றி எரியும் குழந்தைகளைப் பற்றி கவலை கொள்ளவும் இல்லை, கவனத்தில் எடுக்கவும் இல்லை.
குயின் பகுதியில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குழந்தைகளின் (0-17 வயது) வீதம்.
2001 2002 2003 2004 2005
22.2 % 22.6 % 21.0 % 20.9 % 16.8 %
நியு யோர்க்கின் குயின் புறுக்கிளின் பகுதிகளில் காலை நேரங்களில் குழந்தைகள் “கடின வேலை சப்பாத்து” அணிந்து வீதியோரங்களில் நிற்பதைக் காணலாம். அங்கு வரும் வாகனங்கள் இவர்களை நாட் கூலி வேலைக்கு சுற்றுப்புறத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அழைத்துச் செல்கின்றன. இது நாள் தோறும் காணும் காட்சி .
இவ்வாறு ஒரு நாள் வேலைக்கு காத்து நிற்கின்றான் 12 வயது அலி என்ற லத்தீன் அமெரிக்க தோற்றத்தைக் கொண்ட சிறுவன். மெல்லிய தோற்றத்தைக் கொண்ட சுறுசுறுப்பான சிறுவன். இவனது நண்பன் ஒருவன் மூலம் இவனுக்கு ஒரு வாகனம் திருத்துமிடத்தில் வேலை கிடைக்கின்றது. அதே வேலைத் தளத்தில் மேல் உள்ள ஒரு சிpறிய அறையில் இவன் தங்குகின்றான். இவனது 16 வயது சகோதரிக்கும் பாதுகாப்பான இடம் தேவை என்பதனால் இதனை தேர்வு செய்கின்றான். வாகனம் திருத்துவதை விட வேறும் இரு இடங்களில் வேலை பார்க்கின்றான். சுரங்க இரயில் நிலையங்களில் பொருட்கள் விற்பது, சட்டத்திற்கு மாறான விடியோ பிரதிகள் விற்பது போன்றனவும் இவனது நாளாந்த வேலைகள். இவனது சகோதரி ஒரு துரித சாப்பாடு விற்பனை வண்டியில் வேலை பார்க்கின்றார். ஆனாலும் இவளது நடவடிக்கைகள் சில இவனுக்கு புதிராக உள்ளது. ஒரு பழுதடைந்த துரித உணவு விற்பனை வண்டியை சுமார் 4,500 டொலர்கள் கொடுத்து வாங்குகின்றான். இதனை இவனது நெருங்கிய நண்பனே ஏற்பாடு செய்கின்றான். உழைத்து இதனை திருத்தி வியாபாரம் செய்ய வேண்டும் என்பNது இவனது கனவு. அலிக்கு வாகனத்தை பழுது பார்க்க முடியும், சகோதரிக்கு சமைக்கத் தெரியும். இருவரது கனவும் இது தான். மற்றொரு வாகனம் திருத்தும் நிலைய முதலாளி இந்த வாகனத்தைப் பார்த்து விட்டு இதனை திருத்த சுமார் 10,000 டாலர்களுக்கு மேல் செலவாகும் எனக் கூறுகின்றார். கோபமடையும் அலி தனது அடித்து விடுகின்றான். அலியின் சகோதரி இரவு நேரங்களில் பாலியல் தொழிலிலும் ஈடுபடுகின்றாள். இது அலிக்கு தெரிய வருகின்றது. அவ்வப் போது சிறு களவுகள் செய்த அலி பெண்களின் பணப்பையை பறித்தல் என அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கின்றான். இருவருக்கும் மற்றவரது உண்மை தெரிய வர யதார்த்த உலகை நோக்குகின்றனர்.
இது தான் யதார்த்தம். அலிக்கு தன்னைப்பற்றி உண்மைகள் தெரியும் என்பது சகோதரிக்குத் தெரியும். சகோதரிக்கு தான் செய்யும் களவுகள் தெரியும் என்பது அலிக்குத் தெரியும். படத்தின் முடிவில் இருவரது புன்னகையும் அதனை வெளிப்படுத்துகின்றன. என்ன செய்ய முடியும்? அன்றாட வாழ்விற்கு தொடர்ந்து போராடத்தான் வேண்டும்.
யதார்த்தவாத படம் இது. இப் படத்தில் காட்டப்படும் இடம் உண்மையானது. (Willets Point) களம் அமெரிக்க கொலிவ+ட்டிற்கு புதிது. புடத்தில் வரும் காட்சிகள் உண்மையானவை. வுhகளம் திருத்தும் நிறுவன முதலாளியாக நடிப்பவர் உண்மையில் ஓர் முதலாளி. படத்தின் தலைப்பு வாகனங்களை களவெடுத்து உதிரிப்பாகங்கள் விற்கும் இடம் என்பது. இன்றும் இவ் விடத்திற்கு சென்றால் இப்படத்தை காணலாம். (படத்தில் வரும் காட்சிகளை) முதலாளி நாள் முடிவில் சம்பளம் தரும் பொழுது பணத்தை எண்ணக் கூடாது. அவர் சென்ற பின்னரே எண்ண வேண்டும். இது உண்மையில் அப் பகுதியில் அப்படித்தான் நடைபெறுகின்றது. இதனை தான் நேரில் பல தடவைகள் கண்டதாக இயக்குனர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இப் படம் படமாக்கப்பட்ட இடத்தில் இருந்து நியு யோர்க் மெட்ஸ் பேஸ் போல்; (New York Mets Base Ball) ) போட்டிகளை தூரத்தே தெரியும். இல்லையெனில் இரசிகர்கள் போடும் கூப்பாடு கேட்கும். இதன் விளம்பரப் பலகையில் ” Make dreams happen” . என்ற வாசகங்கள் பளபளக்கும். யாருடைய கனவுகள் பலிக்கும? இவ் விடத்தில் மாலை நேரங்களில் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் வந்து செல்வார்கள். இவ் விடத்தில் வேலை பார்க்கும் சிறுவர்களை அரசும் அறியும் குடியும் அறியும். இவர்களுக்கான விடிவு எதுவுமற்றது. இதனை தற்போதைய நியு யோர்க் நகர மேஜர் “the bleakest point of New York” (மிகவும் கடினமான) எனக் குறிப்பிட்டுள்ளார்.
சகோதரி பாலியல் தொழில் செய்வதை அறிந்த அலி தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை ஒளித்து வைத்திருந்த இடத்தில் இருந்து எடுத்து, அவள் வேலை பார்க்கும் வண்டிக்கு சென்று “உனக்கு பணம் தேவைப்பட்டால் வைத்திரு” எனக் கூறி கொடுத்து விட்டுச் செல்கின்றான். அச் சிறுவனின் உலகத்தில் அவனுக்குத் தெரிந்த விடை அது. இவர்களுக்கிடையிலான அன்பு அலாதியானது. விளையாடும் பொழுது, துர்ங்கும் பொழுது, ஓடி, ஓடி வேலை செய்யும் தனது தம்பிக்கு என தான் வேலை பார்க்கும் இடத்தில் இருந்து சாப்பாடு எடுத்து, தம்பி வண்டியை கடந்து செல்லும் பொழுது கவனித்து கொடுத்து “முழுதையும் சாப்பிடு” என இவர்களது பாசத்தை கவித்துவமாக்கியுள்ளார் இயக்குனர். இவர்களது பெற்றோர் யார், பிறந்த இடமெது. எதுவும் பார்வையாளர்களுக்குத் தெரியாது. தேவையுமற்றது. அவர்களது வாழ்வின் கொடூரங்கள் பல லட்சம் அமெரிக்க சிறுவர்களின் வாழ்வை வெளிப்படுத்துகின்றது.
படத்தைப் பார்க்கும் பொழுது இது இரு சிறுவர்கள் பற்றிய படம் என்பதற்கு அப்பால் அவர்கள் பிண்ணனியையும் தேட தூண்டுகின்றது. இயல்பான எளிய சிக்கலற்ற திரைக்கதை.
அமெரிக்காவில் பிறந்து ஈரானில் சில காலம் வாழ்ந்த இயக்குனர் ரமின் பகாரானி நவீன ஈரானிய இயக்குனர்களால்கவரப்பட்டுள்ளார்.“நான் பெரும்பாலானவர்களைப் பற்றித்தான் படங்களை படைக்கின்றேன். கொலிவுட்டைப் போன்று கனவுலக மக்களின் விடயங்களை படைக்கவில்லை” எனத் தெளிவாக இயக்குனர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
புடம் பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் வகையில் பல கேள்விகளை பார்வையாளர்களிடம் விட்டுச் செல்கின்றது. அமெரிக்கா,? குழந்தை தொழிலாளர்களை தடுக்கும் சட்டங்கள் என்ன செய்கின்றன? அமெரிக்காவின் மையத்தில் பலரும’ அறியும் பகுதியில் நடக்கும் சட்ட மீறல்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?. இதனை நுகர்வோர் பெரும் முதலாளிகள். இவர்கள் தான் அரசு. ஊடகங்களிலும், நீதி மனறங்களிலும் பெட்டிச் செய்தியுடனும், சில ஆயிரம் அபராதங்களுடகனும் தொடரும் சட்ட மீறல்களை சட்டங்களும் ஊடகங்களும் பாதுகாத்து வருகின்றன (பெட்டிச் செய்திகள், அபராதங்கள்) யார் யாருக்கு காவல்?
கடந்த சில வருடங்களாக புறுக்கிளின் பகுதியில் தொடர் மாடிக் கட்டிடங்களில் வாழ்ந்த வறுமைக் கோட்டின் கீழ் உள்ள பெரும் பாலோனோர் வெளியேற்றப்பட்டார்கள். நவீன நகரமயமாக்கல் முறையில் இவர்கள் வெளியேற்றப்பட்டு, இக் கட்டிடங்கள் பல பெரிய நிறுவனங்களுக்கு விற்கப்பட்டன. புதிதாக கட்டப்பட்ட இக் கட்டிடங்களில் உயர் வர்க்கத்தினர் குடியமர்த்தப்பட்டனர். பல ஆண்டு காலமாக அப் பகுதியில் வாழ்ந்த மக்கள் வீடற்றவர்களாகி வீதிக்கு வந்து விட்டனர். இதனை அரசு கண்டு கொள்ளவேயில்லை. இன்றும் போராட்ம் தொடர்கின்றது.( ரொரண்ரோவின் றிஞன்ட் பார்க் பகுதியிலும் இவ்வாறான வெளியேற்றம் நடைபெற்றுள்ளது) யார் அதிபராக வந்தாலும் அமெரிக்காவின் வடிவம் மாறும் வரை எதுவும் மாறாது
மன்காட்டன் பகுதியிலோ அல்லது புறோட்வே வீதியில் நடமாடுபவர்களுக்குத் தெரிவது வான் உயர் கட்டிடங்களும், ரைம் ஸ்கூயரில் தெரியும் வான் உயர் விளம்பரங்களும், நவீன நாடக அரங்களும், கலைக் கூடங்களுமே. இது மிகச் சிறுபான்மை அமெரிக்கா. பெரும்பான்மை அமெரிக்காவை இப் படத்தில் காணலாம். இதனை அமெரிக்காவின் பல நகரங்களில் காணலாம். இது 9-11 க்கு முன்னரும் பின்னரும் ஒன்றே. வறுமைக் கோட்டை இந்த அரசியல் யுத்தங்கள் மறைத்தன. மாற்றவில்லை. இதனை இயக்குனர் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.. இது தான் அமெரிக்கா.