தவிர, முன்னை நாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் குழுவினர் கோவனை ஆதரிகக் கூடாது என சோனியா காந்தியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவனின் போராட்ட்ங்களை ஆதரித்துப் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வீ.கே.எஸ்.இளங்கோவனை மாற்றக் கோரி தங்கபாலு மற்றும் சிதம்பரம் குழுவினர் சோனியாவிடம் கோரிக்கைவிடுத்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
பொதுவாக அனைத்துக் கட்சிகளும் ஜெயலலிதா குண்டர்படையான போலிஸ் படையில்னால், நள்ளிரவு கடந்த வேளையில் கோவன் கடத்திச் செல்லப்பட்டு தேசத்துரோக வழக்குத் தொடர்ந்தமைக்கு எதிராக கருத்துத் தெரிவித்துள்ளன.
ஜெயலலிதா அரசு மதுபான மாபியாக் கும்பல்களின் அரசாக செயற்பட்டுவருகிறது. இந்தியாவின் மிகப்பெரும் ஊழல் பேர்வளிகளில் ஒருவரான ஜெயலலிதா கோவனைக் கடத்திச் செல்வதற்கு மதுபானக் கடைகளுக்கு எதிராக அவரும், அவர் சார்ந்த அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகமும் நடத்திய போராட்டங்களே காரணம் என ஜெயலலிதா அரசு கூறுகிறது.
கோவனுக்கு ஆதரவான போராட்டங்கள் தமிழகத்தைக் கடந்து உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்துள்ளது.