ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியை அமெரிக்காவின் பின்பலத்துடன் ஜப்பான் நடத்தி வருகிறது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் பெரும்பகுதியான பங்கை ஜப்பானும் அமெரிக்காவும் கட்டுப்படுத்தி வருகின்றன. இதற்கு எதிராக சீன அரசு ஆசியாவில் புதிய வங்கியொன்றை உருவாக்கியுள்ளது. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி(AIIB) என்ற சீனாவின் வங்கி அமெரிக்க அரசை அச்சுறுத்தியது. இந்த வங்கியில் கடந்த வருடம் அவுஸ்திரேலியா இணைய முற்பட்ட போது அமெரிக்கா தடுத்து நிறுத்தியது.
அமெரிக்காவின் கடும் எதிர்ப்பைப் புறக்கணித்த 40 நாடுகள் இல் இணைவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. முதலில் பிரித்தானிய இந்க வங்கியில் இணைந்கு கொள்வதற்கு இணக்கம் தெரிவித்த போது அமெரிக்கா வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்தது ஒபாமா தனது தனிப்பட்ட கவலையைத் தெரிவித்தார்.
இப்பொது பிரித்தானியாவுடன் பிரான்ஸ், நெதர்லாந்து, நோர்வே, டென்மார்க் போன்ற நாடுகள் உடபட 40 நாடுகள் வங்கியில் இணைந்து கொள்கின்றன. அத்துடன் தாய்வான் இந்தியா போன்ற நாடுகளும் இணைந்துகொள்ள உடன்பாடு தெரிவித்துள்ளன.
அமெரிக்கா ஒரு புறத்தில் நாடுகளை ஆக்கிரமிக்க அதன் மறுபுறத்தில் சீனாவின் தலைமையில் ஆக்கிரமிப்பு நடத்தப்படுகிறது.
இந்த இரண்டு அணிகளும் சில வேளைகளில் உடன்பட்டும் சிலவேளைகளின் முரண்பட்டும் செயற்படுகின்றன. அமெரிக்காவின் ஆசியாவை ஆக்கிரமிப்பதற்கான திட்டம் ஐரோப்பிய நாடுகளுடனான முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. ஆசியாவைச் சூறையாட தமக்குப் போதுமான வாய்ப்புத் தரவில்லை என்பதே ஐரோப்பிய நாடுகளின் ஆதங்
கம். இன்று வரை அமெரிக்காவின் அடியாள் போன்று செயற்பட்ட பிரித்தானியா அமெரிக்காவின் விருப்பத்திற்கு மாறாக சீனாவின் வங்கியோடு இணைவை ஏற்படுத்திக்கொள்வது வரலாற்றில் திருப்பு முனை.
அமெரிக்க அணி பலவீனமடைவதற்கான ஆரம்பப் புள்ளியாக இந்த நடவடிக்கயை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.