கியூபாவில் உற்பத்தியின் ஒரு பகுதி அரசுடமையாக்கப்பட்டிருந்தது. அது மக்கள் உடமையாக்கப்படமையால் வளர்ச்சியற்ற தேக்க நிலை பல வருடங்களாகக் காணப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் அடிமை நாடு போன்று செயற்பட்டுவந்த கியூபாவில் சோவியத் அரச அதிகாரத்தின் ஏற்றுமதி செய்யப்பட்ட உற்பத்தி முறைமையே இருந்து வந்தது. சோவியத்தின் அழிவிற்குப் பின்னர் கியூபாவின் இருப்புச் சாத்தியமற்றதாக மாறியது. அரசுடமையாக்கப்பட்டிருந்த உற்பதியை அரசு தனியுடமையாக்க ஆரம்பித்தது.
இந்த நிலையில் அமெரிக்க அரசு தலையிட்டு கியூபாவில் ஆரம்பித்திருந்த அழிவுகளைத் துரிதப்படுத எண்ணியதன் விளைவே பேச்சுக்களும் இணக்கமும்.
பிடல் கஸ்ரோ என்ற தனிமனித ஆளுமையின் கீழிருந்த கியூபா இன்று வாசிங்டனில் குடிகொள்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
இன்றைய கியூபாவின் அதிகாரவர்க்கத்தின் நலன்கள் அமெரிக்க அதிகாரவர்க்கத்தின் நலன்களுக்கு ஒப்பானது. நெல்சன் மண்டேலாவிற்குப் பின்னர் பிடல் கஸ்ரோவை அரசியல் கொலை செய்ய முயற்சிக்கிறது அமெரிக்க அரசு.