Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியாவின் ஆக்கிரமிப்பு நோக்கங்களே எமது நோக்கமும் : BTF இன் காட்டிக்கொடுப்பு

இந்தியத் தூதரகத்தில்  BTF
இந்தியத் தூதரகத்தில் BTF

தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் இந்தியத் தூதரகங்களினுள் இறுதியில் முடக்கப்பட்டுள்ளதாக அதன் தலமைகள் என வரித்துக்கொண்ட அமைப்புக்கள் அறிவிக்க ஆரம்பித்துவிட்டன. இலங்கையில் தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் மீதான ஒடுக்குமுறையின் போர்க்காலப் பிரதிநிதி மகிந்த ராஜபக்ச என்றால், அதன் வரலாற்றுப் பங்காளி இந்திய அரசு.

எண்பதுகளில் சிறுகச் சிறுக பரிணாம வளர்ச்சியடைந்து கொண்டிருந்த விடுதலை இயக்கங்களில் பல மக்கள் அமைப்புக்களை உருவாக்க ஆரம்பித்திருந்தன. பல்வேறு கருத்துக்களின் மோதல்கள் புதிய அரசியல் சிந்தனையாக மாற்றமடைய ஆரம்பித்தது. கோரமான ஒடுக்குமுறைகளைக் கடந்து இளம் புரட்சியாளர்கள் வடக்குக் கிழக்கில் உருவாக ஆரம்பித்திருந்தனர். அவ்வேளையில் இந்திய அரசு போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கி ஈழம் பிடிக்க உதவுவதாக அறிவித்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்திய அரச படைகளால் பயிற்றுவிக்கப்பட்டனர்.

இந்திய இராணுவம் இயக்கங்களை வெறும் இராணுவக் குழுக்களாக மாற்றியது. இயக்க மோதல்களால் இளைஞர்கள் குழுக்களாகினர். இயக்க மோதல்கள் ஆரம்பித்தன. இந்திய அரசு திட்டமிட்டவாறே, போராட்டம் இந்திய உழைக்கும் மக்களிடமிருந்து அன்னியமானது. ஒரு சில தனி நபர்களால் கையாளத்தக்க குழுக்களாக முழுமையான போராட்டமும் மாற்றமடைந்து 2009 ஆம் ஆண்டு அதே இந்திய அரசின் முழுமையான பின்பலத்துடன் ஈழப் போராட்டமும் அதன் நியாயமும் அழிக்கப்பட்டது.

எஞ்சியிருந்த ஜனநாயக முற்போக்கு சக்திகள் குரல்வளை நெரிக்கப்பட்டு போராடம் முழுமையும் பிழைப்புவாதிகளின் பிடிக்குள் சிக்கியது. 2009 ஆம் ஆண்டின் பின்னர் ஈழப் போராட்டம் என்பது வெறுமனே பணம் திரட்டும் மூலமாக மாறியது.

வடக்குக் கிழக்கில் பல்தேசிய நிறுவனங்களதும், மேற்கு ஏகாதிபத்தியத் தரகர்களது, அடியாட்களது கைகளில் மக்களின் தலைமை விழுந்தது. புலம்பெயர் நாடுகளில் போராட்டம் ஒரு ‘பிராண்ட்’ ஆக மாறியது.

மேற்கு நாடுகளின் கால்பந்தாட்ட கழங்கள் தமது சின்னங்களையும் அடையாளங்களையும், ரீ- ஷேர்ட், காலணி போன்றவற்றை விற்பனை செய்வதனூடாக மில்லியன்களைத் திரட்டிக் கொள்கின்றன. இவ்வாறு வியாபார அடையாளமாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்தி லட்சங்கள் புரளும் வியாபாரத்தை நடத்தும் புலம்பெயர் குழுக்கள் தோன்றின.

இதன் மறுபக்கத்தில் சில குழுக்கள் தமிழர்களை அழித்த நாடுகளின் அடியாள் படைகளாகச் செயற்பட ஆரம்பித்தன. உலகின் அதிபயங்கரக் கொலைகாரர்கள் எல்லாம் ஒடுக்கப்படும் தமிழ் மக்களைக் காப்பாற்றுவார்கள் என்று மக்களை ஏமாற்றினர். எண்பதுகளில் மேற்கு ஏகாதிபத்தியங்களுக்கும், உளவு நிறுவனங்களுக்கும் எதிராக நூற்றுக்கணக்கான வெளியீடுகள் வடக்குக்கிழக்கில் வெளியிடப்பட்டன. மக்கள் மத்தியிலும் போராளிகள் மத்தியிலும் இந்த உணர்வு வெளிப்பட்டது.

இவை சிறிது சிறிதாகத் திட்டமிட்டு மாற்றப்பட்டு இன்று ஏகபோக நாடுகளின் பிடியில் தமிழ்த் தலைமை ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

இதன் இன்னொரு கட்டமாக பிரித்தானியத் தமிழர் பேரவை(BTF) என்ற அமைப்பு லண்டனில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்திற்குச் சென்று இந்தியாவிடம் தமிழர்களுக்கான தீர்வை ஒப்படைப்பதாகக் கூறியுள்ளது.

80 களில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட போராட்டம் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட பின்னரும் மக்களில் நம்பிக்கையற்று இந்திய அரசின் காலடிகளில் சரணடையும் இக் குழுக்கள் மக்களின் நண்பர்கள் அல்ல.
தமது சந்திப்புத் தொடர்பாக பிரித்தானியத் தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில், தமிழர்கள்ன் நீதிக்கும் சுந்திரத்திற்குமான போராட்டத்தில் இந்தியாவின் பங்கை அங்கீகரிப்பதாகக் கூறுகிறது.

ஈழத்தில் மட்டுமல்ல தமது சொந்த நாட்டின் எல்லைகுள்ளேயே சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டங்களை அழித்துத் துவம்சம் செய்யும் இரத்டக்காட்டேரிகளின் அரசான இந்திய அரசின் பங்கை அங்கீகரிப்பதாகக் கூறுவது அவமானகரமானதாகும்.

தமிழ் மக்களின் மூலோபாய நலன்களைக் கருத்தில் கொண்டு தமழர்களின் தாயகத்தில் இந்தியாவைத் தலையிடுமாறு பிரித்தானியத் தமிழர் பேரவை கோருகின்றது.

இந்திய இராணுவத்தின் காட்டுத் தர்ப்பாரில் அழிக்கப்பட்ட அனைத்துத் தமிழ்ப் பேசும் மக்களின் சார்பாகவும் இந்திய அரசின் காலடிகளில் விழுந்து வணங்கும் பீ.ரி.எப் தமது சகாக்களையும் கூட்டிச் சென்றே இந்தியத் தூதரகத்தில் சரண்டந்ததாகக் கூறுகிறது. இந்துக் கவுன்சில் என்ற ஆ.எஸ்.எஸ் ஆதரவு அமைப்பு பீ,ரி,எப் உடன் இந்தியத் தூதரக அதிகாரிகளைச் சந்திக்கச் சென்றதாகக் கூறுகிறது.

பீ.ரி.எப் இந்தியத் தூதரகத்திற்குச் சென்ற நாளில் அங்கு இந்தியப் பழங்குடி மக்களுக்கு ஆதரவாகவும், கஷ்மீரில் சுய நிர்ணைய உரிமை கோரிப் போராடும் மக்களுக்கு ஆதரவாகவும், இந்தியா முழுவதும் ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாகவும் எந்தப் போராட்டங்களும் நடைபெறவில்லை என்பதால் தடையின்றி தமது எசமானர்களிடம் சென்றனர்.

இந்திய அரசின் ஆக்கிரமிப்பு நோக்கத்தைத் தாம் பகிர்ந்து கொள்வதாக பீ.ரி.எப் தனது அறிக்கையில் மேலும் கூறுவதனூடாக இந்தியாவின் ஐந்தம் படையாகத் தம்மை அறிவித்துள்ளது!

BTF இன் அறிக்கை: BTF+meets+Indian+High+Commission+officials+in+London

Exit mobile version