இதுகுறித்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 29-வது கூட்டத்தொடர் தற்போது ஜெனீவா நகரில் நடந்து வருகிறது. இதன் இணைக் கூட்டமாக இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்த சிறப்புக் கூட்டத்தை, என்னால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு நடத்துகிறது.
ஜூன் 24-ந் தேதி (நாளை) புதன்கிழமை அன்று மாலை ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அரங்கம் எண் 22-ல் இந்தச் சிறப்புக் கூட்டம் நடக்கிறது. இங்கிலாந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழர்கள் நீதிக்கான நல்லெண்ண தூதுவருமான லீ ஸ்காட் இக்கூட்டத்துக்கு தலைமையேற்கிறார்.
சர்வதேச மனித உரிமைகள் சட்ட வல்லுநரும், இங்கிலாந்து வழக்கறிஞர் பேரவையின் மனித உரிமைகள் குழு தலைவருமான ஜானினி கிருஷ்டி பிரிமிலோ, தமிழ்நாட்டில் இருந்து வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவைத் தலைவர் க.பாலு ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
இக்கூட்டத்தை பசுமைத் தாயகம், பிரித்தானிய தமிழர் பேரவை, அமெரிக்க தமிழர் அரசியல் செயற்பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன. பசுமைத் தாயகம் பொதுச்செயலாளர் ஆர்.அருள் மற்றும் பன்னாட்டு மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
தென்னிந்தியாவின் ஆதிக்க சாதி வெறியர்களின் கூடாரமான பாட்டாளி மக்கள் கட்சி என்ற சாதிச் சங்கத்தின் தன்னார்வ நிறுவனமே பசுமைத் தாயகம். காங்கிரஸ் அரசில் அமைச்சராகவிருந்த அன்புமணி ராமதாஸ் மற்றும் குடும்பத்தினரின் தன்னார்வ நிறுவனமான பசுமைத் தாயகம். 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பசுமைத் தாயகம் உலக வங்கி மற்றும் ஐ.நா, அமெரிக்க அரசு போன்றவற்றின் நிதி உதவியில் இயங்கும் அமைப்பாகும்.
இந்தியாவில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கிறோம் என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பின் நோக்கம் சூழல் பாதுகாப்பிற்கு எதிரான மக்கள் போராட்டங்களை முடக்குவதே.
தமிழ் நாட்டின் ஆதிக்க சாதி வெறியர்களுடன் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இணைந்து கொள்வது இது முதல் தடவையல்ல. உலகின் ஏனைய முற்போக்கு ஜனநாயக சக்திகளிடமிருந்கு மக்களை அன்னியப்படுத்தி அமெரிக்காவின் கரங்களில் போர்க்குற்ற விசாரணையை நிபந்தனையின்றி ஒப்படைத்து ஆட்சி மாற்றத்தை மட்டுமே தீர்வாக முன்வைக்க பின்னணியில் செயற்பட்ட புலம்பெயர் அமைப்புக்கள் இன்று தம்மை வெளிப்படையாக அடையாளம் காட்ட ஆரம்பித்துள்ளன.
தன்னார்வ நிறுவனங்களின் பிடிக்குள் தமிழ் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை உட்படுத்தி நடத்தப்படும் அழிப்பு நடவடிக்கைய்ன் ஒரு பகுதியே இது.
இதற்கு முன்னதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் புடைசூழ உலகத் தமிழர் பேரவை இரகசியக் கூட்டம் ஒன்றை நடத்தியமை குறிப்பிடத்தக்கது,.