Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேர்தல் : ஆங்கிலத் தேசியவாதிகள் வெளி நாட்டவர்களை வெளியேற்றக் கோருகின்றனர்

ukbasபிரித்தானியப் பாராளுமன்றத் தேர்தலுக்கு மூன்று வாரங்களே உள்ள நிலையில் குடிவரவுப் பிரச்சனையே பிரதானமானதாக கட்சிகளிடையே விவாதிக்கப்படுகின்றது. ஏனைய சமூகப் பிரச்சனைகளிலும் அதிகமாக வெளி நாட்டுக் குடியேறிகள் தொடர்பான பிரச்சனையே அதிகமாகப் பேசப்படுகிறது. ஆங்கிலத் தேசியவாதம் அடிமட்ட மக்கள் வரை ஊடுருவ ஆரம்பித்துள்ளது. வெளி நாட்டவர்களை வெளியேற்றுவதும் அவர்களின் உரிமையை மறுப்பதுமே பிரித்தானிய மக்களின் நல்வாழ்விற்கான ஒரே தீர்வு என்பதை பிரித்தானிய சுதந்திரக் கட்சி- UKIP-என்ற ஆங்கில தேசியவாதக் கட்சி கூறும் அதே வேளை ஏனைய கட்சிகள் அதனை நிராகரித்து உறுதியான திட்டம் எதனையும் முன்வைக்கவில்லை.

பிரதான கட்சிகளான தொழிற் கட்சியும், பழமைவாதக் கட்சியும் குடிவரவைக் கட்டுப்படுத்துவதற்குத் தங்களிடமே பொருத்தமான திட்டங்கள் உள்ளதகக் கூறிவருகின்றன.

இத்தாலி, ஸ்பெயின், போத்துக்கல் போன்ற நாடுகளிலிருந்து போதிய குடியேறிகள் பிரித்தானியாவை நோக்கி இடம் பெயர்வதால் பல் தேசிய வியாபார நிறுவனங்கள் ஐரோப்பியர்கள் அல்லாத ஏனய குடியேறிகளைக் கட்டுப்படுத்தவும் வெளியேற்றவும் முயற்சிக்கும் நிறவாதக் கட்சிகளுக்கும் ஆதரவு வழங்க ஆரம்பித்துள்ளன.

தொழிற் கட்சி, பழமைவாதக் கட்சி உட்பட UKIP இற்கும் பல்தேசிய வியாபார நிறுவனங்களே பண உதவியை வழங்கி வருகின்றன.

வழமை போல தேசிய வெறி, மனிதாபிமானம் மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரான கோரப்பற்களைக் காட்ட ஆரம்பித்துள்ளது.

இதுவரை தமக்கு மலிவான கூலிகளையே வெளி நாடுகளிலிருந்து பெற்றுவந்த பிரித்தானியா போன்ற நாடுகள் இப்போது அதனை வலிமை குறைந்த ஐரோப்பிய நாடுகளிலிருந்து பெற்றுக்கொள்வதால் ஏனைய நாட்டு அகதிகள் மற்றும் குடியேறிகளின் நிலை கேள்விக்குள்ளாகும் என பலர் கூறுகின்றனர்.

சீமான் போன்ற இனவாதக் கும்பல்கள் தமிழ் நாட்டில் நாளாந்தக் கூலிக்கு வேலைக்கு வரும் வெளி மாநிலத்தவர்கள் மீதான இனவாதத்தைக் உமிழ்வது போன்று பிரித்தானியத் தேசியவாதக் கட்சியான நிறவாதம் கலந்த ஆங்கிலத் தேசியவாதத்தை உமிழ்கிறது.

இனவாதம் மக்களை இலகுவில் பற்றிக்கொண்டு சமூகத்தைச் சிதைப்பது போன்று UKIP இன் தலைவரான நைஜல் பராக் இன் நிறவாதம் கலந்த ஆங்கிலத் தேசியவாதம் அனைத்து வெளி நாட்டவர்களையும் பிரித்தானியர்களுக்கு எதிரியாகக் காட்ட முற்படுகிறது. சீமான் மற்றும் நைஜல் போன்ற சமூக விரோதிகள் அதிகாரவர்க்கத்தின் இருப்பிற்குத் தேவைப்படுவதால் ஒரு எல்லை வரைக்கும் அவர்களை அதிகாரவர்க்கம் வாழ அனுமதிக்கிறது.

தொழிற் கட்சியின் பிரதமர் வேட்பாளரான எட் மிலிபாண்ட் வெளி நாட்டவர்கள் குறைந்த கூலிக்கு வேலைக்கு அமர்த்தும் வேலை நிறுவனங்களே பிரித்தானியத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதற்குக் காரணம் என்கிறார். அதேவேளை தாமே வெளி நாட்டவர்களைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளதாக பழமைவாதக் கட்சியின் டேவிட் கமரன் கூறுகிறார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த மனித உரிமைச் செயற்பாட்டளரான லி ஜெஸ்பர் பல்தேசிய நிறுவனங்களை நடத்தும் வெளி நாட்டவர்கள் மீது எந்தக் கட்சிக்கும் வெறுப்புக் கிடையாது என்றும், இவை வெறும் அப்பாவித் தொழிலாளர்கள் மீதான தாக்குதலே என்றும் கூறினார்.

வெளி நாட்டவர்களை பிரித்தானியாவை விட்டு வெளியேற்றினால் மருத்துவச் சேவை, சில்லரை விற்பனை, சேவைத்துறை போன்றவை இயங்க முடியாத நிலையை எட்டும் எனக் குறிப்பிட்டார்.

இன்று தேசியவாதம் என்பது தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து விரல்விட்டெண்ணக் கூடிய முதலாளிகளின் நலனுக்காகப் பயன்படுத்தபடுகின்றது.

Exit mobile version