Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

செ. கதிர்காமநாதன் படைப்புகள் நூல் அறிமுக நிகழ்வு

Invitationதேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் முற்போக்கு தமிழ் இலக்கியப் படைப்பாளர்களுள் முக்கியமானவராகத் திகழ்ந்த எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான செ. கதிர்காமநாதன் அவர்களின் படைப்புகள் அனைத்தையும் உள்ளடக்கியதாக வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினதும், கனடா – தேடகம் அமைப்பினரதும் நிதி அனுசரணையுடன் கரவெட்டி பிரதேச கலாசாரப் பேரவையினால் கடந்த வருடம் வெளியிடப்பட்ட ‘செ.கதிர்காமநாதன் படைப்புகள்’ நூலின் அறிமுக நிகழ்வானது எதிர்வரும் 06.07.2016 புதன் கிழமை அன்று பி.ப. 3.30 மணிக்கு கே.கே.எஸ். வீதி, கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

தாயகம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் திரு க. தணிகாசலம் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் நூல் அறிமுக உரையை எழுத்தாளர் திரு ஐ. சாந்தன் அவர்கள் ஆற்றவுள்ளதுடன், கருத்துரைகளை கரவெட்டி பிரதேச செயலாளர் திரு ச. சிவஸ்ரீ அவர்களும், ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு மா. இராசநாயகம் அவர்களும், இந் நூலின் தொகுப்பாளர்களுள் ஒருவரான திரு த. அஜந்தகுமார் அவர்களும் ஆற்றவுள்ளனர், ரூபா 700 மதிப்பிலான இந்நூலின் பிரதியொன்று இவ் அறிமுக நிகழ்வில் ரூபா 500க்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் இவ் அறிமுக நிகழ்வில் தவறாது கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

Exit mobile version