இலங்கை புதிய அரசாங்கத்தின் 100 நாள் சிறிய வேலைத் திட்டத்திற்கு நட்பு நாடு என்ற ரீதியில் ஆதரவு வழங்கத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
அதே வேளை, செயலாளர் நிஷா பிஸ்வால் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
´இலங்கையின் முன்னேற்றம் குறித்து நேரில் அறிவதற்கு நான் ஆவலாக உள்ளேன். இலங்கையில் ஏற்பட்ட ஜனாதிபதித் தேர்தல் ஆட்சி மாற்றம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சிறிய 100 நாள் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அதில் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் இன்னும் சில சவால்களும் உள்ளன. இந்த திட்டத்தை செயற்படுத்த இலங்கையின் நட்பு நாடு என்ற அடிப்படையில் ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா தயார் என்றார்.
ராஜபக்சவின் ஊடாக வன்னி இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட அமெரிக்கா இனச் சுத்திகரிப்பைச் சத்தமின்றித் தொடர்வதற்காகவும் இலங்கையைச் சூறையாடுவதற்காகவும் மைத்திரிபாலவை நியமித்துள்ளது. அமெரிக்காவின் அடியாள் படைகள் போன்று செயற்பட்ட புலம்பெயர் அமைப்புக்கள் அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர்.