ரஜனியின் திரைப்பட வியாபாரம் இந்துத்துவா அமைப்புக்களால் ஒருங்கிணைக்கப்படுகின்றது. என்பதற்கான ஆதாரங்கள் இனியொருவால் வெளியிடப்பட்டிருந்தது.
இதுவே ரஜனியின் ஆர்.எஸ்.எஸ் ஆதரவிற்கும் தூத்துக்குடி மக்கள் போராட்ட எதிர்ப்பிற்கும் அடிப்படை. இந்தியாவை ஒட்டச் சுரண்டும் ஏகாதிபத்தியத்திட்டத்திற்கு இந்துத்துவா அமைப்புக்களே தத்துவார்த முலாம் பூசுகின்றன.
ஆக, மோடி மற்றும் வேதாந்தாவின் நம்பிக்கைகுரிய கைக்கூலி ரஜனியின் திரைப்படம் புலம்பெயர் நாடுகளில் முற்றாகப் புறக்கணிக்கப்பட வேண்டும். தூத்துக்குடி மக்களின் தியாகத்திற்கு மட்டுமன்றி, ஈழத் தமிழர்களின் தியாகத்திற்கும் இழப்பிற்குமான அஞ்சலியாக இப் புறக்கணிப்பு அமையட்டும்.
தமிழக போலிஸ் கும்பல்களால் கொலை செய்யப்பட்டு தூத்துக்குடி தெருக்களில் வீசியெறியப்பட்ட மனிதப் பிணங்களின் மேல் நடந்துசென்று ரஜனியின் திரைப்படத்தின் முன்னால் உட்காந்திருப்பது அவமானத்திற்குரிய செயற்பாடு என்பதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம்.
காலாவில் காண்பிக்கப்படும் “சமூகவிரோத” வன்முறைகளின் காரணமாகவே தரப்படுத்தும் குழு அனைவரும் பார்வையிடுவதற்கான அனுமதியை மறுத்திருந்தது. பின்னதாக திரைப்படத்தின் விநியோகத்தர்களான ஐங்கரனின் வேண்டுகோளின் அடிப்ப்டையில் வன்முறைக் 2 நிமிடங்களும் 23 செகண்ட்களுக்குமான காட்சிகள் நீக்கப்பட்டு வெளியிட அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்வையிடக்கூடிய இடைத்தர வன்முறைகளைக் கொண்ட திரைப்படமாகவே அனுமதிக்கப்பட்டுள்ளது.
ரஜனிகாந்தின் தூத்துக்குடி மக்கள் மீதான வன்மம் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை ஆகியவற்றைக் கடந்து இவ்வாறான வன்முறைத் திரைப்படங்கள் புலம்பெயர் நாடுகளின் இளம் சந்ததியின் மீது வன்முறையைத் திணிக்கும் என்பதை பிரித்தானிய தரப்படுத்தல் அமைப்பே கூறியிருக்கிறது.
http://www.bbfc.co.uk/releases/kaala-film
https://iskconnews.org/new-photos-released-iskcon-leaders-meet-indian-pm-modi-and-uk-pm-david-cameron,5248