Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இறுதிப் போரில் இந்தியா வழங்கிய உதவிகளைப் பகிரங்கமாக வெளியிட முடியாது : பசில்

basilவன்னிப் போரில் இந்தியா தமக்குப் பல உதவிகளை வழங்கியது என்றும் அவற்றை அவர்கள் வெளியில் சொல்ல முடியது என்றும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள பசில் இப்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்தியா வழங்கிய உதவிகள் காரணமாகவே தாம் போரில் வெற்றிபெற்றதாகவும் குறிப்பிட்டார்.

தனது சகாவான முன்னை நாள் அமைச்சரிடமே பசில் இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் இந்தியாவைப் பகைத்துக்கொண்டமையே தேர்தலில் தோல்வியடைந்தமைக்கான காரணம் என்றும் தெரிவித்தார்.

ஒருபுறத்தில் தன்னை விடுதலை செய்யாவிட்டால் இரகசியங்களை வெளியிடுவேன் என்ற வகையில் பசில் மிரட்டுவது வெளிப்படையாகத் தெரிகிறது. எது எவ்வாறாயினும் பல்வேறு மர்மங்களைக் கொண்ட இறுதி அழிப்பின் பின்புலத்தில் இந்தியாவின் பங்கு பிரதானமானது.

இராணுவப் பொருளாதார உதவிகளை வழங்கியதை இந்தியா வெளிப்படையாகக் கூறி வருகிறது. இதற்கு அப்பால், வெவ்வேறு உதவிகள் வழங்கப்பட்டிருக்கலாம்.
சீமான், வை.கோ பொன்ற இனவாத வாக்குப் பொறுக்கிகளைக் களத்தில் உலவர விட்டதிலிருந்து பல்வேறு கொலைகளில் இந்தியாவின் பங்கு ஆராயப்பட வேண்டும்.

1980 ஆம் ஆண்டுகளில் சிறிய போராளிக் குழுக்களுக்கு இந்தியா வழங்கிய இராணுவப் பொருளாதார உதவிகள், பயிற்சிகள் போன்றன இயக்கங்களை ஊதிப் பெருக்கி தூய இராணுவக் குழுக்களாக மாற்றின.

தமிழ் நாட்டில் தலைமையகத்தைக் கொண்டிருந்த இயக்கங்கள் அங்கு தமது ஆதரவாளர்களைத் திரட்டினர். அவர்களின் அரசியல் பின்புலம் ஆராயப்படாமல் உள்வாங்கப்பட்டனர். இன்றுவரை தமிழ் உணர்வாளர்கள் என்ற பெயரில் எந்தச் சிக்கல்களும்மின்றி அரசியல் நடத்தும் இவர்கள் இந்திய அரசிற்கு எதிராகவோ, ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்களின் நலன்களுக்காகவோ செயற்பட்டதில்லை. போர்க் நடைபெற்ற காலத்தில் தமிழ் நாட்டில் உருவாகக் கூடிய எழுச்சிகளை இத் தமிழ் உணர்வாளர்களே தடுத்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

இன்றும் ஈழத்தில் போராட்டங்கள் தோன்றுவதற்குத் தடையாகவும், இந்தியாவில் இந்திய அரசிற்கு எதிராகப் போராடும் முற்போக்கு ஜனநாயகக் சகதிகளை ஈழப் போராட்டத்திலிருந்து அன்னியப்படுத்தும் நாசகார வேலைகளையும் இக் குழுக்களே செய்து வருகின்றன. ஆக, யுத்த காலத்தில் இந்தியாவின் உதவிகள் தொடர்பான ஆழமான ஆய்வுகள் தேவை.

Exit mobile version