முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ, முன்னாள் அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க மற்றும் திவிநெகுமு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.ஏ.ஏ.கே ரணவக்க ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் இவர்களை கைது செய்துள்ளனர்.
இந்த மூன்று பேரும் இன்று இரவு 7.00 மணியளவில்
கடுவெல நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படனர்.
தேர்தல் முடிவுகள் வெளியான மறு நாளே பசில் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டதும், அவரே இலங்கைக்குள் மீண்டும் நுளைந்ததும் கைதானதும் பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.