இந்த நிலையில் தென் கிழக்கு ஆசியாவை மையமாகக் கொண்ட ஒருவரை நியமிப்பதற்காக அமெரிக்கா தலைமையிலான நாடுகள் தேடலில் ஈடுபட்ட போது ஐ.நா செயலாளர் பதவிக்கு, இலங்கையில் ஜயந்த தனபால, தாய்லாந்து உதவிப்பிரதமரான சத்திராதி, இந்தியாவில் சஷி தாகூர் ஆகியோர் முன்மொழியப்பட்டனர். புது டெல்லியில் ராஜதந்திரப் பணி ஊடாக அத் துறைக்கு அறிமுகமான பன் கீ மூன் பதவிக்குப் பொருத்தமானவர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.
இலங்கையில் எழுபதுகளின் இறுதிப்பகுதியிலிருந்து கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்திவரும் பல்தேசிய வர்த்தகரான சாங் வான் ஜோங் என்பவர் ராஜபக்சவுடன் பேசி ஜயந்த தனபால போட்டியிடுவதை நிறுத்தியதாகவும் அதனாலேயே பன் கீ மூன் வெற்றியடைந்தாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிடுள்ளன.
பன் கீ மூன் இன் நண்பரான சாங் வான் ஜோங் அரச கடனைப் பயன்படுத்தி எரி சக்தித் துறையில் வெளி நாடுகளில் முதலீடு செய்துள்ளார். முதலீடுகளில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்வதற்காக கொரியாவின் முன்னை நாள் ஜனாதிபதி லீ மயொங் பக் உடன் இணைந்து ஊழலில் ஈடுபட்டுள்ளார் எனக் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டன. விசாரணைகளின் இடையே கடந்த வியாளனன்று சங் வான் யொங் தற்கொலை செய்துகொண்டார்.
சாங் இற்கும் தனக்கும் இலங்கை அரசுடனும் ராஜபக்சவுடனும் தனிப்பட்ட உறவு காணப்படத்தை பன் கீ மூன் மறுத்துள்ளார்.
இச் செய்தியை தமிழ் ஊடகங்களும் அரை குறையாக வெளியிட்டன. இறுதியில் பன் கீ மூன் இற்கும் ராஜபக்சவிற்குன் இடையேயான தனிப்பட்ட தொடர்புகளே இனப்படுகொலைக்கு ஐ.நா ஆதரவு வழங்கியமை என்று ஆய்வுகளை முன்வைத்துள்ளன. மக்களுக்கு அறிவியலையும் உண்மையையும் போதிக்க வேண்டிய ஊடகங்கள் ஒரு மக்கள் கூட்டத்தின் படுகொலையை இரண்டு தனி நபர்களிடையேயான உறவாகக் குறுக்கிக் கொச்சைத்தனமாகப் பரபரப்புச் செய்திகளைப் பரப்பிவருகின்றன.
ராஜபக்சவின் ஜனாதிபதித் தேர்தலுக்கான நிதி தென் கொரிய அரசால் பன் கீ மூன் ஊடாகவே ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு சுனாமித் அனர்த்தங்களின் பின்னர் இலங்கைக்குப் பயணம் செய்த பன் கீ மூன், அங்கு ராஜபக்சவால் உருவாக்கப்பட்ட தன்னார்வ நிறுவனமான ஹெல்ப்பிங் ஹம்பாந்தோட்ட என்ற அமைப்பிற்குப் பெருந்தொகைப் பணத்தை வழங்கினார்.
இப் பணம் பின்னதாக ராஜபக்ச்வின் தேர்தல் பிரச்சார நிதிக்காகப் பயன்படுத்தப்பட்டது. இதன் பின்னரே ஐ.நா இன் செயலாளராக பன் கீ மூன் தெரிவானார். அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் எதிர்க்கின்ற தனி மனிதர்கள் ஐ.நா வில் முக்கிய பதவிகளை வகிக்க முடியாது. இந்த வகையில் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும் பணியைச் செய்து முடித்த பன் கீ மூன், ஐ.நா செயலாளராக ‘நியமிக்கப்பட்டமை’ இனப்படுகொலையத் தொடர்ந்து ஆதரிப்பதற்காகவும் கூடவே. ஆக, சுனாமி ஆசியாவைத் தாக்கிய காலப்பகுதியிலேயே இனப்படுகொலை திட்டமிடப்பட்டு, ராஜபக்ச ஜனாதிபதியாக்கப்பட்டார். ஐ.நா வில் செயலாளரான பன் கீ மூன் என்ற ஏகாதிபத்திய அடியாள், இலங்கையில் ராஜபக்ச இனப்படுகொலை நடத்துவதற்கு மிகவும் திடமிட்ட வகையில் ஏகாதிபத்தியங்களின் பிரதிநிதியாக உதவினார் என்பது தரவு.