இலங்கையில் ஆறாம் திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் பிரிவினை கோருவது தடைசெய்யப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி பிரிந்து செல்லும் உரிமையைத் தடை செய்ய அரசு முயல்கிறது. அதே போன்று இனவாதம், மத வாதத்திற்கு எதிரான சட்டங்களைப் பயன்படுத்தி சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடைப்படைக் கோரிகைகளை இலங்கை அரச பேரினவாதிகள் இனவாதமாகவும் மதவாதமாகவும் உரு மாற்ற முனையலாம். இனவாத்ததை அழிக்க விரும்பினால் சிறுபான்மைத் தேசிய இனங்களில் சுய நிர்ணைய உரிமையை அங்கீகரிப்பதிலிருந்தே ஆரம்பிக்கலாம்.