Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடமாகாண சபையைக் காட்டிக்கொடுத்த ஐங்கரநேசன் என்ற சுற்றாடல் அழிப்புக் குற்றவாளி

ayngaranesanசுன்னாகம் பிரதேசம் முழுவதும் நஞ்ச்சாக்கப்பட்ட போது, வட மாகாண சபையின் அனுமதியின்றி அதன் முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனுடன் இணைந்து விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் போலி நிபுணர் குழு ஒன்றை அமைத்தார். எம்.ரி.டி வோக்கஸ் என்ற மலேசியாவைத் தளமாகக்கொண்ட நிறுவனத்தின் கிளையான நோதேர்ன்பவர் என்ற நிறுவனத்தைக் காப்பாற்றி மக்களை அழிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த சதி முயற்சிக்கு எதிராக மல்லாகம் நீதி மன்றத்தில் நேற்று 19.04.2016 அன்று நடைபெற்ற வழக்கில் கேள்வி எழுப்பப்பட்டது.

நீதி மன்றத்தின் கேள்விக்குப் பதிலளித்த விவசாய அமைச்சர் பொ.ஐங்கரனேசன், தான் நிபுணர் குழுவை அமைக்கவில்லை எனவும் வடமாகாண சபையே அதற்குப் பொறுப்பு எனவும் கூறித் தப்பித்துக்கொண்டார். வட மாகாண சபையைக் காட்டிக்கொடுத்து ஐங்கரநேசன் தப்பிக்கொண்ட விவகாரம் தொடர்பாக அச் சபை சார்பில் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

தனது அவுஸ்திரேலிய சகாக்களுடன் இணைந்து போலி நிபுணர் குழுவை விக்னேஸ்வரனின் ஆதரவுடன் அமைத்தவர் ஐங்கரநேசனே. போலி அறிக்கை ஒன்றைத் தயாரிப்பதற்கு ஐங்கரநேசன் வட மாகாண சபையைப் பயன்படுத்திக்கொண்டார். இன்று முழு வட மாகாண சபை உறுப்பினர்களையும் நீதிமன்றத்தில் காட்டிக்கொடுக்கிறார்.

புலம்பெயர் பினாமிகளின் ஆதரவு பெற்ற ஐங்கரனேசனும் விக்னேஸ்வரனும் இணைந்த இக் கூட்டணி முள்ளிவாய்க்கால் அழிவின் பின்னான மிகப்பெரும் அழிவிற்குத் துணை சென்ற சூத்திரதாரிகள்.

யாழ்ப்பாணத்தில் செயற்படும் எந்த அரசியல் கட்சிகளும் சுன்னாகம் நீர் நஞ்சாக்கப்பட்ட விடையம் தொடர்பாக இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை. மல்ரி பில்லியன் டொலர் பல்தேசிய வர்த்தக நிறுவனமான எம்.டி.ரி வோக்கஸ் இன்று இலங்கைப் பங்கு சந்தையில் பிரதான நிறுவனமாகத் திகழ்கிறது. கொழும்புத் துறைமுக முகாமைத்துவத்திற்கான ஒப்பந்தம் இந்த நிறுவனத்திற்கு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு, புலம்பெயர் பினாமிகள், ஐங்கரநேசன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகிய சமூகவிரோத சக்திகளின் கூட்டு சுன்னாகத்தில் நடத்திய அழிவில் மக்கள் அனாதரவாக விடப்பட்டுள்ளனர்.

Exit mobile version