Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐங்கரநேசன் – அவுஸ்திரேலிய பினாமிகளின் களையெடுப்பின் பின்னணியில்

Ainkaranesan                                                                                 வடக்கின் அப்பட்டமான ஊழல் அரசியல்வாதிகள் என்ற பட்டியலின் உச்சத்திலிருப்பவர்களில் இருவர் வட மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஆகியோர். பிரித்தானியாவிலிருந்து விதவைப் பெண்களுக்கு உதவி நிதி வழங்குவதற்காக சென்ற புலம்பெயர் தமிழர்களிடம் உதவிப்பணத்தில் தனக்கு 20 வீதம் வழங்குமாறு அடம்பிடிக்கும் அளவிற்கு சிறீதரனின் ஊழல் மலிவடைந்துள்ளது.

80 களின் ஆரம்பத்தில் ரெலோ அமைப்பின் விசுவாசியான ஐங்கரநேசன் சுன்னாகம் நிலக்கீழ் நீரை நஞ்சாக்கிய நிறுவனத்தின் எலும்புத்துண்டுகளுக்காக இரண்டு லட்சம் மக்களின் வாழ்க்கையை கேள்விக்கு உள்ளாக்கினார்.

விக்னேஸ்வரனுடன் இணைந்து அவர் உருவாக்கிய நிபுணர் குழு தொடர்பாக நீதிமன்றம் கேள்வியெழுப்பிய வேளையில் முழு மாகாணசபையையும் காட்டிக்கொடுத்துவிட்டுத் தப்பிக்கொண்டார். இலங்கை அரசே ஒப்புதலளித்த நீர் மாசடைந்த அழிவை மூடி மறைத்து தனது பணப்பையை நிரப்பிக்கொண்டார்.

கடந்த வாரம் சிறீதரனின் குறு நிலப் பிரதேசமான கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அரசியலில் களையெடுக்கப் போவதாக ஐங்கரநேசன் உணர்ச்சிவசப்பட்டார்.

1986 ஆம் ஆண்டு பொது மக்களின் ஆர்பாட்டம் ஒன்றின் மீது ஐங்கரநேசன் சார்ந்திருந்த ரெலோ அமைப்பு தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவிகளின் உடல்கள் அஞ்சலிக்காக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் வைக்கப்பட்டிருந்தன. அவ்வேளையில் உணர்ச்சிவ்சப்பட்ட நிலையில் ஒலி பெருக்கி பொருத்திய வாகனத்தில் வந்த ஐங்கரநேசன், கொலைகளைக் கண்டித்தவர்களைக் களையெடுக்கப்போவதாக மிரட்டினார்.

ஐங்கரநேசனை உண்மையான மக்கள் சேவையாளன் என பிரதேச சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை புகழுரை படிக்க அரங்கமே அருவருப்பானது.

விக்னேஸ்வரனை அவுஸ்திரேலியாவிலிருந்து கையாளும் நிமலன் கார்த்திகேயன் குழுவினர் ஐங்கரநேசன் ஊடாகவே தமது திட்டங்களைச் செயற்படுத்துகின்றனர்.

நாளைய சந்ததியின் அழிவிற்கான புதிய ஊற்றுமூலங்களான ஐங்கரநேசனையும். அவரின் புதிய அடியாளான பசுபதிப்பிள்ளையையும், விக்னேஸ்வரனையும் இயக்கும் பிழைப்புவாதிகளின் துளியம் புதிய இணையம் ஒன்று அவுஸ்திரேலியாவிலிருந்து

இயக்கப்படுவதுகுறிப்பிடத்தக்கது.லங்காசிறீ இற்கு மாற்றாக புதிய ஊழல் சாம்ராஜியத்தை உருவாக்க முயலும் இக் குழுக்கள் ஆபத்தானவை. இவ்வாறான ஊடகங்கள் நமது சமூகத்தின் அவமானச் சின்னங்கள்.
குறுக்கு வழிகளில் தமது நோக்கங்களை அடைவதற்காக மக்கள் பற்றற்ற பிழைப்பு வாதிகளின் இணைப்புக்கள் மக்கள் சார்ந்த மாற்று அரசியல் முன்வைக்கப்படும் வரை தொடரும்.

Exit mobile version