Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நிறைவேறிய 19 வது திருத்தச் சட்டம்- வெற்றுப் பேப்பர்

1919 திருத்தச்சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை நாட்டு மக்களுக்குக் கிடைத்த வெற்றியென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் ஜனாதிபதி இரண்டு தடவைக்கு மேல் பதவி வகிக்க முடியாது என்ற திருத்தத்தைத் தவிர குறிப்பிடும் வகையிலான எந்தத் திருத்தங்களும் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அரச ஒழுங்கமைப்பு அடிமட்ட மக்கள் வரை தெளிவாகக் கட்டமைக்கப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. இதுவே பாசிச ஒழுங்கமைப்பை நிறுவுவதற்கும் பயன்படுகிறது.

ஜனாதிபதி ஆட்சி இல்லாமலிருந்த 1970 ஆம் ஆண்டுகளிலேயே ஜே.வி.பி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற தலையங்கத்தில் இலங்கை அரசு நடத்திய கொலை வெறியாட்டத்தில் தெருத்தெருவாகப் பிணங்கள் கிடந்ததை வரலாறு மறந்துவிடாது. ஜனாதிபதி ஆட்சியில் சில திருந்தங்களைக் கொண்டுவருவது இலங்கையில் வாழ்பவர்களுக்குக் கிடைத்த குறைந்த பட்ச வெற்றி கூட இல்லை என்பதை உணர்த்த இதுவே ஒரு உதாரணம்.

Exit mobile version