27.09.2008.
கொழும்பில் விடுதலைப் புலிகளால் நடத்தப்படும் தாக்குதல்களை கட்டுப்படுத்துவதற்காகவே நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லையென்பதை நாம் அறிவோம். அது உண்மை. ஆனால், 98 வீதமான தீவிரவாதிகள் தமிழர்களாகவே உள்ளனர்.
லண்டன் பி.பி.சி. செய்திச் சேவைக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோதாபய ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்;
யுத்தத்தில் கடல், தரை மற்றும் ஆகாயம் என்ற மூன்று மார்க்கங்களிலும் நாம் முன்னிலையில் நிற்கின்றோம்.
எமது படையினரின் எண்ணிக்கை விடுதலைப் புலி உறுப்பினரின் எண்ணிக்கையிலும் பார்க்க அதி கூடியதாக உள்ளதுடன் எமது ஆயுத சக்தியும் அதிசக்தி வாய்ந்ததாகவேயுள்ளது.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த யுத்தத்தில் நாம் வெற்றி பெறுவோம் என்பதிலும் வெகு விரைவில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்பதிலும் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
கிளிநொச்சிக்கு மிகவும் அண்மித்த பகுதியிலேயே தற்போது நாம் நிலை கொண்டுள்ளோம். தொடர்ந்து நடைபெறும் மோதல்களின் இடையில் சிக்குவதைத் தவிர்ப்பதற்காகவே ஐ.நா. உதவி அமைப்புகள் உள்ளிட்ட தொண்டர் அமைப்புகளை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளோம்.