Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

9/11 தாக்குதலின் 15 வருடம் : அமெரிக்க சர்வதேசியப் பயங்கரவாதத்தின் ஆரம்ப நாள்

911_inside_jobஅமெரிக்காவின் இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்டு இன்று 15 வது வருடம். உலகம் முழுவதுமுள்ள மக்கள் அனைவரையும் இத் தாக்குதலின் பின்னல் இஸ்லாமியத் தீவிரவாதம் ஒளிந்திருக்கிறது என அமெரிக்க அதிகாரவர்க்கம் நம்பவைத்த குரூர நாடக அரங்கின் திரை அகற்றப்பட்ட நாள் இன்று. ‘பயங்கரவத்த்திற்கு எதிரான போர்’ என்ற தலையங்கத்தில் அமெரிக்க அரசு உலகம் முழுவதும் தனது அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிடவும், இஸ்லாமிய சமூகத்தை உலக மக்களின் எதிரிகள் என்ற விம்பத்தைக் கட்டமைக்கவும் இந்த நாளே துணை சென்றது. சவூதி அரேபியா போன்ற நாடுகளைப் பயன்படுத்தியும் நேரடியாகவும் இஸ்லாமியத் தீவிரவாதத்தையும், அதன் மறுபக்கத்தில் அதற்கு எதிரான இராணுவ மயமாக்கலையும் அமெரிக்க அரசு திட்டமிட்டு மேற்கொண்டது.
உலகத்தை இராணுவமயப்படுத்திய அமெரிக்கா இன்று அதன் கொலைகளை நிரந்தரமாக்கியுள்ளது. இவை அனைத்துக்கும் மேலாக அமெரிக்க அரசின் திட்டமிட்ட செயலே இரட்டைக் கோபுரத் தாக்குதல் என்ற ஆதாரங்கள் அமெரிக்கா நியமித்த ஆணைக்குழு கூட ஏற்றுக்கொண்டுள்ளது.
1. ஆணைக்குழுவின் இணைத் தலைவர் லீ ஹமில்டன் கூற்றுப்படி, தனது விசாரணையில் தோல்வியடைய வேண்டும் என்ற நோக்கத்துடனேயே ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. ஆக, 9/11 தாக்குதல் தொடர்பாக மக்கள் கேள்வியெழுப்பவேண்டும்.
2. ஆணைக்குழுவின் தலைமைக் குழுவின் கூற்றுப்படி அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்தும் உளவுத்துறையான சீஐஏ இன் பக்கத்திலிருந்தும் விசாரணையை உரிய முறையில் நடத்துவதற்கு எதிரான அழுத்தங்கள் வருகின்றன. ஆக, விசாரணை தோல்வியடைந்துள்ளது.
3. ஆணைக்குழுவின் ஆணையாளர் பொப் கெரியின் கூற்றுப்படி, “எமக்கு ஆரம்பத்தில் கூறப்பட்டதைவிட வேறு வழிகளிலேயே தாக்குதல் நடைபெற்றிருப்பதற்கான சாத்தியங்கள் உள்ள போதும் அதனை விசாரணை செய்வதற்கான சாத்தியங்கள் இல்லை.”
4. மற்றொரு ஆணையாளர் திமோதி ரோஎமர் இன் கூற்றுப்படி, “எமக்குக் கிடைக்கும் பொய்யான தகவல்களால் நாம் மிகவும் விரக்தி நிலையிலுள்ளோம்.”
5. மற்றொரு ஆணையாளர் மக்ஸ் கிளேலான்ட் தனது பதவியிலிருந்து விலகிக்கொள்ளும் போது, பின்வருமாறு கூறினார் “இது ஒரு தேசிய ஊழல், 9/11 விவகாரம் அமெரிக்காவிற்கு முக்கியமானது, இதற்கான காரணங்களை நாம் விரைவில் கண்டறியவேண்டும். அதற்கு வெள்ளை மாளிகையே தடையாகவுள்ளது.”
6. ஆணைக்குழுவின் தலைமை ஆலோசகர் ஜோன் பார்மர் தனது அறிக்கையில். “உண்மை என்னவென்று நமது விசாரணைகளின் அடிப்டையில் தெரியவந்த போது நான் அதிர்ச்சிக்கு உள்ளானேன், நாடாக்களைப் பரிசீலித்த போது அது எமக்குக் கூறப்பட்டதற்கு முற்றிலும் முரணான செய்திகளைக் கூறுகின்றன. உண்மைகளை அரசு மறைக்க முற்படுகிறது.
இவை அனைத்திற்கும் மேலாக பல்வேறு நேரடிச் சாட்சிகளும் ஆதரங்களும் முன்னரே வெளியாகியிருந்தன. அவற்றை திட்டமிட்ட பொய் அல்லது பிரமை எனக் கூறிவந்த அமெரிக்க அரசு, தனது ஆணைக்குழுவிடமிருந்து வெளிவந்த எதிர்ப்பையும் இருட்டடிப்புச் செய்தது.
அமெரிக்காவின் பல்தேசிய வர்த்தக நிறுவனங்களின் பிடியிலிருக்கும் பிரதான ஊடகங்கள் உண்மையை மறைத்து பொய்களைப் பொதுப் புத்தியாக மாற்ற திட்டமிட்டுச் செயற்பட்டன. இன்றைய தமிழ் ஊடகங்கள் இக் கோப்ரட் ஊடங்களின் வால்கள் போன்று தம்மை வெளிப்படுத்தி 9/11 தாக்குதல் தொடர்பான செய்திகளை வெளியிட்டன. முப்பது வருட ஆயுதப் போராட்டம் மக்கள் சார்ந்த எந்த ஊடகத்தையும் உருவாக்கவில்லை என்பது தமிழ் தேசிய அவமானம்!

Exit mobile version