Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

83 வர்த்தகப் பிரதிநிதிகள் படையை அனுப்பிவைக்கும் இந்தியா : மன்மோகனே சென்றிருக்கலாம்

cbcpngஇந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தமிழ் நாட்டு வாக்கு வங்கியை இழக்க விரும்பாமையே பொது நலவாய நாடுகளின் மாநாட்டிற்குச் செல்லாமைக்கான அடிப்படைக் காரணம் என்பது வெளிப்படை. இலங்கையில் நடைபெறும் இந்த மாநாட்டின் வர்த்தகப் பிரிவில் பிரித்தானியாவிற்கு அடுத்தப்படியாக அதிகப் பிரதிநிதிகள் இந்தியாவிலிருந்தே செல்கின்றனர். 83 வர்த்தகப் பிரதிநிதிகள் -அவற்றில் பெரும்பாலானோர் பல்தேசியப் பண முதலைகளைப் பிரதிநிதித்துவம் செய்வோர் – மாநாட்டின் முக்கிய நிகழ்வான பொதுநலவாய வர்த்தகக் கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர். அனைத்து நாடுகளின் வர்த்தகப் பிரதிநிதிகளிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட 45 பேருடன் இனக்கொலையாளி மகிந்த ராஜபக்ச வட்டமேசை மாநாடு ஒன்றை நடத்தவுள்ளார். அங்கு நாட்டின் வளங்களை விற்பனை செய்வதற்கான பேச்சுக்கள் நடைபெறும் என எதிர்வுகூறப்படுகின்றது. பொதுநலவாய நாடுகளின் வர்த்தக ஆணையத்தின் தலைவர் மோகன்  கௌல் கூறுகையில் ‘மிகப்பெரிய வாய்ப்புக்களை இலங்கை வழங்குகிறது.இந்த வாய்ப்புக்கள் பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு சேவை செய்யும் என்கிறார்’.

அதனை மக்களின் மொழியில் சொன்னால் ராஜபக்ச அரசிற்கு மேலும் அழுத்தங்கள் வழங்கப்படாதிருக்க நாட்டின் வழங்களையும் மக்களின் வாழ்க்கையையும் அந்த அரசு விலைபேசுகின்றது. பல்தேசியக் கொள்ளைக்காரர்கள் குதூகலமடைந்துள்ளனர். அவர்களின் பிரதிநிதிகளான இந்திய அரசு உட்பட ஏனைய அரசுகள் இனக்கொலையாளியை அங்கீகரித்து நாடுதிரும்பும்.

Exit mobile version