ஐரோப்பாவில் மீள முடியாத நெருக்கடிக்குள் அரசுகள் உட்படுத்தபாட்டுள்ளன. பெரும் பண முதலைகளின் வருமானம் நாளாந்தம் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இந்த நிலையில் பிரித்தானிய அரசின் புதிய சமூக நலக் குறைப்புத் திட்டம் காரணமாக 80 ஆயிரம் குழந்தைகள் வீடற்றவர்களாகும் நிலை உருவாகியுள்ளதாக கிறிஸ்துவ மத பிரதான குருக்கள் சபை பிரித்தானிய அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்ட்பரி பிரதான குரு ருவான் வில்லியம்ஸ் மற்றும் பிரித்தானியா முழுவதும் உள்ள கிறீஸ்தவ திருச்சபைகள் இந்த அறிக்கையை விடுத்துள்ளன.